dinamalar telegram
Advertisement

குட்கா விற்பனை தடுக்க கண்காணிப்பு குழு

Share
சென்னை:குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதனையடுத்து மேற்கண்ட பொருட்களை உற்பத்திசெய்வது மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது.

இதன்படி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட குழு குட்கா போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கும். மேலும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • duruvasar - indraprastham,இந்தியா

    கண்காணிப்பு குழுதான் நல்ல தீர்வு. எதுவும் நம் கையை மீறி போகாமல் பார்த்துக்கொள்ள உதவும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    என்னடா புழு அமைக்கவில்லையே என்று நினைத்தேன்... அதற்குள் அடுத்த புழு ரெடி. நன்கு மீன் பிடிக்கலாம்.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    சிகரெட்டு பீடி சுருட்டு டாஸ்மாக் சரக்கு இவைகள் காய கல்பங்களா ..

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    குளுவில் இடம் பெற்றுல்லவர்கல் நல்ல மோப்ப சக்தி உடைய பிராணிகல்னு நம்புவோம்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    இந்த பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் யார் என்று தெரியவில்லை என்று மனசாட்சி உள்ள அரசு சம்பளம் வாங்கும் அதிகாரிகள் சொல்லுங்கள் பார்க்கலாம். விற்பனை செய்பவனை பிடிப்பது என்பது மிகவும் கீழ்தரமான செயல். அவனை பிடித்து விட்டால் சப்ளையர் மாட்டுவான். அதன் தொடர்ச்சி உற்பத்தி செய்பவர்கள் மாட்டுவார்கள். சிறு பிள்ளைகள் அறிந்த விஷயம் லட்சம் ரூபாய்களில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அறியாதது இந்த தேசத்தின் அவமானம்.... வெட்கம் கெட்ட பயலுகள்.....

Advertisement