dinamalar telegram
Advertisement

சைபர் குற்றங்களை தடுக்க காவல்துறை நவீனமயம்: ஸ்டாலின்

Share
சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை வண்டலூர் அருகே தமிழக காவல்துறை பயிற்சி மையத்தில்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு நாள் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அதிகரித்து வரும் பாலியல் மற்றும் நிதி சார்ந்த சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழக காவல்துறையிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். விழாவில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த டி.எஸ்.பி.க்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • அப்புசாமி -

    இருக்குற போலுசையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டு, ரோபோக்களை நியமிக்கலாம். அதி நவீனமயமாகும். தொப்பை 100 சதவீதம் குறையும்.

  • ராஜா -

    ஆன் லைனில் புகார் கொடுத்தால் ஸ்டேஷனுக்கு வந்து புகார் எழுதிக்கொடுக்க சொல்லுவார்கள். அதுதான் நவீனமயம்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    மண்டபத்துல யாரோ எளுதித் தராங்க. ஐயா போற போக்கில் வாசிச்சுட்டு போறார். கேவலம் ஆவின் பூத்துல மாமூல் கேட்டு மிரட்டுறவனை ஒடுக்க முடியாத சிரிப்பு போலீஸ் இங்கிலாந்து அமெரிக்கா ரேஞ்சுல சைபர் குத்தங்களை தடுக்கப் போகுதா? சைபர்'னா ஜீரோ'ங்கறதைத் தாண்டி நம்ம போலீஸுக்கு விவரம் தெரியாதே?

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    சைபர் குற்றங்களையும் கற்பழிப்பு போன்ற கொடுமையான குற்றங்களையும் குடக போன்றவைகளும் உங்கள் ஆட்சியில் மட்டும் தான் அதிகம் விற்பனை அதுவும் உங்கள் ஆட்கள் அந்த தொழிலையும் செய்கின்றனர். முதலில் அவர்களை கட்டுப்படுத்துங்கள்.

  • Raj - Chennai ,இந்தியா

    21 இடத்தில் ஆய்வு நடத்தி 25 லட்சம் கை செலவுக்கு பெற்று வந்தது போல்

Advertisement