dinamalar telegram
Advertisement

கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா ரூ.30 லட்சம் அபராதம்: சட்டத்தை மீறியதாக புகார்

Share
மாஸ்கோ: தனிப்பட்ட தகவல்கள் சட்டத்தை மீறியதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.


ரஷ்ய அரசுக்கும் அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்கும் கடந்த சில மாதங்களாக உரசல் ஏற்பட்டுள்ளது. புடினை நீண்டகால அதிபராக கொண்டிருக்கும் ரஷ்யாவில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதனை உடனுக்குடன் தடுத்துவிடும் வேலையை செய்கிறது ரஷ்யா. முன்னதாக தடை செய்யப்பட்ட கருத்துக்களை அனுமதித்ததாக கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அபராதம் விதித்தது.


இந்நிலையில் தற்போது தனிப்பட்ட தகவல்கள் சட்டத்தை கூகுள் மீறிவிட்டதாக ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். உள்ளூரில் அலுவலகம் தொடங்கி ரஷ்ய பயனர்களின் தகவல்களை அங்கேயே சேமிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதனை நடைமுறைப்படுத்தாததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களுக்கும், தடை செய்த கருத்துக்களை அனுமதித்ததாக கூறி தொடர்ச்சியாக அபராதம் விதிக்கிறது ரஷ்யா.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Eswaran - TRICHY,இந்தியா

    Google நிறுவனத்திற்கு 30 லட்சம் ஒரு நிமிஷத்து வருமானம்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    கூகுல்ல அவனவன் கோடிக்கணக்குல சம்பளம் வாங்கறான் ...ஹிஹிஹி

  • அப்புசாமி -

    முப்பது லட்சம் ரூவாயெல்லாம் ஒரு அபராதமா?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    கவர்ன்மென்ட் அபராதம் விதிக்கற மாதிரி கம்பெனி நடத்த வெட்கமாக இல்லையா? சட்ட மீறல்கள் செய்யாமல் கம்பெனி ஓட்ட முடியலையா??

Advertisement