dinamalar telegram
Advertisement

பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மாற்றம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Share
சென்னை: பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினைக் குறைக்கும் வகையில், அதிகபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்பு இருந்தபடி, 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மற்றும் மத்திய வேளாண் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒரு முறைக்கும் மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் ஆகிய 3 தொலைநோக்கு பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு - செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49 சதவீதத்தில் இருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 சதவீதமாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 சதவீதமாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016-17 ல் ரூ.566 கோடியாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-21ல் ரூ.1918 கோடியாக (239 சதவீதம்) அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று உள்ள இந்த காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரித்துவரும் நிலையில், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளது. எனவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில், அதிகபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்வர் அக்கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    பயிர்காப்பீட்டில் மத்திய அரசு 49% மாநில அரசு 49% விவசாயி வெறும் 2% . ஆனால் இழப்பீடு மட்டும் நூறு சதம் (விவசாயத் துறை லஞ்சம் 20% போக) விவசாயிக்கு

  • Raghasrin - ,

    ஐயா தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...தயவுசெய்து உங்கள் பத்திரிக்கையில் கூடுமான வரை ஒன்றியம் என்ற சொல்லை தவிர்கவும்

  • ஆரூர் ரங் -

    பிச்சையை குறைத்தால் பிச்சைகார ஆட்களுக்கு 😡கோபம் வராதா?😇 (ஆர் எஸ் பாரதீ வார்த்தைகளில்). மத்திய அரசிடம் கையேந்தும் போதே ஒன்றியம்ன்னு கிண்டலடித்துவிட்டு இப்போ கெஞ்சி என்ன பயன்? மோதி விவசாயிகளுக்கு 6000 கொடுப்பதைக் கூட கிண்டலடித்தது உங்க கட்சி ஆட்கள். ஏன்னா அதில் கமிஷன் அடிக்க முடியலயே . முடிஞ்சா இப்போ மீண்டும் எலிக்கறி போராட்டம் நடத்திப்பார்

  • S. Bharani - singapore,சிங்கப்பூர்

    பயிர் என்றால் என்ன? காப்பீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? இதையெல்லாம் யாரும் ஸ்டாலினிடம் கேட்டு விடாதீர்கள் பாவம்...

  • ஆரூர் ரங் -

    மத்திய வேளாண் சட்டங்கள் வேண்டாம். ஏனெனில் அது மாநிலப் பட்டியலில் உள்ள துறை என்று போராட்டம் நடத்தியது 😎நீங்கதானே ? அப்போ பயிர்க் காப்பீடுக்கும் மாநில அரசே செலவழிக்கட்டும் . மத்திய அரசும் தன் வருவாயில் 40 சதவீதத்தை மாநில👌 பட்ஜெட் மானியமாக தருகிறார்கள். பின் ஏன் கெஞ்ச வேண்டும்?

Advertisement