dinamalar telegram
Advertisement

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பழனிசாமி மீது வழக்கு

Share
சென்னை: திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, தனது வீட்டில் தொண்டர்களுடன் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்நிலையில் பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (39)

  • venkates - ngr,இந்தியா

    முன்னாள் முதல்வர் என்பதால் செய்யலாமா?

  • Ram - Thanjavur,இந்தியா

    இதெல்லாம் ஒரு பொழப்பு - இனிமே மல்லாக்க படுத்து தண்ணி குடிச்சாலும் உங்கள் அரசியல் வாழ்கை கா(கலி)

  • Ram - Thanjavur,இந்தியா

    அயோ அயோ நான் விளையாடா பேசுனதெல்லாம் நம்பிட்டீங்க

  • அப்புசாமி -

    வாக்குறுதிகளை நிறைவேத்தலைன்னு எந்த ஒரு நீதிமன்றமும் தானா வழக்குப் போட்டு விசாரிக்க முடியாதா? நிறைய கேஸ் கிடைக்குமே...

  • அப்புசாமி -

    தப்பும் தவறுமாக தமிழில் எழுதி பதாகை பிடிச்சு, தமிழை இழிவு படுடுத்துனதுக்காக தனியா வழக்குப் போட்டு உள்ளே தள்ளணும். ஆனா, போலூஸுக்கு மட்டும் தமிழ் தெரியுமான்னு டவுட்டு வருது தனபாலு.

Advertisement