dinamalar telegram
Advertisement

நைஜீரியா, தென் ஆப்ரிக்காவுக்கு 1 கோடி தடுப்பூசி அனுப்பிய அமெரிக்கா

Share
வாஷிங்டன்: கோவிட் வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளோம். இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்படி முதற்கட்டமாக நைஜீரியாவிற்கு 40 லட்சம் 'மாடர்னா' தடுப்பூசிகளும், தென் ஆப்ரிக்காவிற்கு 56 லட்சம் தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.64 கோடியாக உயரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நைஜீரியா மற்றும் தென் ஆப்ரிக்காவிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதன் மூலம், அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தபடி உலக நாடுகளுக்கு 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • sundarsvpr - chennai,இந்தியா

    தடுப்பு ஊசி அனுப்பியதற்கு உலகம் வாழ்த்தும். உடன் மருத்தவ பணியாளர்கள் அனுப்பியிருந்தால் முழுமையான பயன் கிடைத்திருக்கும்

  • அப்புசாமி -

    நைஜீரியாவுக்கா? அங்கே மூர்க்கர்கள் எல்லாத்தையும் பிடுங்கிக் கொள்வார்களே... பெண்களுக்கு தடுப்பூசி போட புத்தகத்தில் சொல்ல வில்லை என்பார்களே...

Advertisement