dinamalar telegram
Advertisement

கோவிட் உயிரிழப்பு 21% அதிகரிப்பு; தடுப்பூசி ஒன்றே தீர்வு: உலக சுகாதார அமைப்பு

Share
ஜெனிவா: உலக அளவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது திடீரென மீண்டும் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: உலக அளவில் இதுவரை 19.5 கோடி பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 69 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இதனால் கோவிட் உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்பு அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக, கோவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளாதவர்களே தீவிர தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்பை தடுக்கும். ஆனால் பல ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி கிடைக்காத நிலை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்ற வளர்ந்த நாடுகள் உதவ முன்வர வேண்டும். அதேபோல், கோவிட் புதிய பாதிப்புகளும் கடந்த வாரத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், இன்னும் இரு வாரங்களில் ஒட்டுமொத்த பாதிப்பு 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாகி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

    உலக நாடுகள் முன் வராவிட்டால் என்ன, சீனாவுக்கு இயற்கை ஆப்பு வைத்திருக்கிறது. நாங்கள் கட்டி இருக்கிறோம் பாருங்கள் என்று பாலங்கள், அணைகள் தீவுகள் என்று எத்தனையோ செய்தார்கள் அல்லவே அதை எல்லாம் இப்பொழுது கொட்டி தீர்க்கும் மழை ஒரு வழி பண்ண போகிறது. முடிவில் சீன பரம ஏழை நாடாகி விடும். மேலும் பீஸ் பீஸ் அகா போகிறது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே என்று சீன மக்களின் கோபம் வெடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒரு நாள் உய்க்ஹுர் ஒரு நாள் ஹுனான் ஒரு நாள் குங்க்ஷு என்று ஒவ்வொன்றாக பிய்த்துக்கொண்டு போகப்போகிறார்கள். உலகின் மிஞ்சியுள்ள ஒரே கம்யூனிச நாடும் ரஷ்யா போல பல நாடுகளாக பிய்த்து கொண்டு போவதை உலகம் பார்க்கும். அடக்குமுறை எத்தனை நாள் செல்லும்? சீனர்களுக்கு ஒரு நாள் விடியும் .

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    வைரஸ்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.அவற்றிற்கு கரோனா என்று பெயர் கொடுத்தது மகா தவறு.PCR டெஸ்டை ஒழியுங்கள் .

  • Marai Nayagan - Chennai,இந்தியா

    சீனா எப்படி இருக்கு? அவனுகளுக்கு ஆப்பு அடித்தால்தான் எல்லாம் சரிவரும்...உலக நாடுகள் செலவிடும் தொகையை அவனிடம் பிடுங்க வேண்டும். அல்லது சீனா கம்யூனிஸ்ட்களை தனிமை படுத்தி பொருளாதாரத்தை முடக்க வேண்டும்

Advertisement