Load Image
Advertisement

கோவாக்சின் முதல் தவணை போட்டவர்கள் காத்திருப்பு: கடலூர் மாவட்டத்தில் தொடரும் தட்டுப்பாடு

 கோவாக்சின் முதல் தவணை போட்டவர்கள்  காத்திருப்பு: கடலூர் மாவட்டத்தில் தொடரும் தட்டுப்பாடு
ADVERTISEMENT
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள் வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் தினசரி ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு, தற்போது 100க்கும் கீழ் குறைந்துள்ளது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை பாதிப்பு 60,179 ஆக உள்ளது. 58,556 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரையில் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் நேற்று வரையில் 2 கோடியே, 19 லட்சத்து 14 ஆயிரத்து 566 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.கடலுார் மாவட்டத்தில் இதுவரையில் 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 73 ஆயிரத்து 186 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர். 4 லட்சத்து 51 ஆயிரத்து 583 பேர் முதல் டோஸ், 88 ஆயிரத்து 424 பேர் இரண்டாவது டோஸ் போட்டுள்ளனர்.மாவட்டத்தில் முதல் டோஸ் செலுத்திக் கொண்டு, இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து விட்டது. இதில் பலர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டு, இரண்டாவது டோஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.மாவட்டத்திற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே அதிகளவில் ஒதுக்கப்படுகிறது. இதனால் முதல் டோஸ் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போட முடியாமல் தவிக்கின்றனர்.கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்கள் தினசரி அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.இதனால் மாவட்டத்தில் நிலவும் கோவாக்சின் தட்டுப்பாட்டை போக்க, கடலுார் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்.இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு உள்ளது.


கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கப்படாததால், முற்றிலும் இருப்பு இல்லை.இதனால் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மட்டுமே செலுத்தப்படுகிறது. தமிழகத்திற்கே கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கப்படாத நிலையில், கடலுார் மாவட்டத்திற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநில சுகாதாரத்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். விரைவில் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கப்பட்டால், முதல் தவணை செலுத்தி காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் செலுத்தப்படும்' என்றனர்.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    சும்மாங்காட்டியும் தமிழகத்துக்கு 15 லட்சம் தடுப்பூசி, 20 லட்சம் தடுப்பூசி வந்திருக்கு. சுகாதார செயலர் வாங்கி வெச்சுக்கிட்டாருன்னு நியூஸ் வருதே தவிர, யாருக்கும் தடுப்பூசி போடற மாதிரியே தெரியலை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement