dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம் : முதல்வருக்கு ஒரு கடிதம்!

Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வழக்கறிஞர் டி.எஸ்.கோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு... முதல்வராக பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில், தி.மு.க.,வை எதிர்த்தோர் உட்பட பலரும் பாராட்டும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள்.தமிழகத்தை தொழில் வளம் மிக்கதாக மாற்றவும், விவசாயத்தை மேம்படுத்தவும், அரசுக்கு ஆலோசனைகள் வழங்கபொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளதும் பாராட்டத்தக்கது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் செப்டம்பரிலும், மாநகராட்சி தேர்தல் டிசம்பரிலும் நடக்க உள்ளன. அந்த தேர்தல்கள் முடிந்த பின், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஓட்டு வங்கி பற்றி கவலைப்பட தேவையில்லை. தேசிய தலைமை மீது உங்களுக்கு ஆசை இருப்பதாக தெரியவில்லை. அதனால் அரசியல்வாதியாக இல்லாமல், அனுபவமிக்க தலைவராக செயல்பட வேண்டிய தருணம் இது. முதல்வர்கள் நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், பினராயி விஜயன் ஆகியோரை போல் பக்குவம் பெற்ற தலைவராக செயல்பட வேண்டும். மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறுவது; நவோதயா பள்ளி, 'நீட்' தேர்வு ஆகியவற்றை எதிர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதை கைவிட வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு செலவிடும் நேரத்தை,ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

மேற்கு வங்கம், டில்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களில் மின் உற்பத்தி மற்றும் வினியோகம், வெற்றிகரமாக தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். 'ஆவின்' நிறுவனம் சிறப்பாக செயல்பட, குஜராத் கூட்டுறவு பால் விற்பனை அமைப்பின் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வருவாய் இழப்பை பற்றி கவலைப்படாமல் பீஹார், குஜராத் மாநிலங்களை போல, தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் செயல்படுகின்றன. தமிழகத்திலும் அந்த முறையை பின்பற்றி, கூட்டுறவு சங்கங்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான புதிய திட்டங்கள், விவசாயத்திற்கு தேவையான சீர்திருத்தங்கள், மாநில அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தாய்மொழியான தமிழ் மீதுள்ள பற்று பாராட்டத்தக்கது; ஆனால் மக்களின் உணர்வுகளை துாண்டி, ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியல்ல. பிற மொழி கற்க விரும்புவோருக்கு, அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்தினால், தமிழக மக்கள் உங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (68)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்தியாவின் அடுத்த பிரதமராக வரும் தகுதி உடைய நவீன் பட்நாயக் உடன் எந்த ஒரு தகுதியும் இல்லாமல் விபத்தில் முதல்வரான ஒப்பிடுவதே தவறு.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இதில் ஒன்றுகூட நடக்காது. சுயரூபம் தெரியாமல் சொல்லும் நல்ல யோசனைகள். விழலுக்கு இறைத்த நீர்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  . ஏன்யா தமிழ் நாட்டுக்கு எதிராகவே இருக்கீங்க என்று பாஜக வைக் கேட்க வேண்டியது தானே?

 • HSR - MUMBAI,இந்தியா

  இதுல ஒண்ணு நடந்தாலும் உலகம் அழிஞ்சிடும்..

 • S.kausalya - Chennai,இந்தியா

  ஒரே வரியில் சொல்லலாம் ஒரிசா முதல்வர் போன்று தன் மாநில மக்கள் நலம் என்று வரும்போது ஒரு மாநில தலைவனாக, அதை காக்கவும் ,,தேசிய நலன் என்று வரும் போது , கட்சிபேதம் பார்க்காமல், மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்னும் அவரது செயலையும், ஸ்டாலின் கடை பிடித்தால் போதும். ஆனால்இவர், தன் கட்சி, அதன் நிதி, இப்போது கிடைத்துள்ள அரசு முதல்வர்.பதவி இதெல்லாம் எப்போதும் தானும் ,தனக்கு பின் தன் வாரிசுகளும் கைகொள்ளவெண்டும் என்ற ஒரே நினைவில் பணியாற்றுகிறார். அரசியல் எதிரிகளை, எதிர் கொள்ள முடியாமல் என்ன செய்து அவர்களை அழிக்கலாம் என்றே யோசித்து கலக்கமடைந்து முக்கிய பணிகளை பற்றிய சிந்தனை இல்லாமல் உள்ளார். இவருக்கு எல்லாம் அறிவுரை கூறுவது waste

Advertisement