dinamalar telegram
Advertisement

மேகதாது அணை கட்டியே தீருவோம் : புதிய முதல்வர் பசவராஜ் விடாப்பிடி

Share
பெங்களூரு :''பிரதமரையும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி பெற்று விரைவில் கட்டப்படும். அணை கட்டுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்,'' என, கர்நாடக புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தும், கர்நாடகா அரசு விடாபிடியாக உள்ளது.அம்மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர், அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக புதிய முதல்வராக நேற்று பதவியேற்ற பசவராஜ் பொம்மை, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கூறியதாவது:மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அரசு பின் வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த திட்டம் கர்நாடக அரசின் உரிமை. சட்டம் கர்நாடக மாநிலத்துக்கு சாதகமாக உள்ளது.பிரதமரையும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து, அணை கட்டுவதற்கு அனுமதி பெற்று விரைவில் கட்டப்படும். குடிநீருக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், நாளை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

  • Nagarajan R -

    இதைக் கண்டித்து,ஆட்டுக்கார அண்ணாமலை அவர்கள் பசவராஜ் பொம்மை அவர்கள் மீது பிரதமரிடம் கண்டனம் தெரிவிப்பார் என அறிவிக்கப்படுகிறது

  • Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்

    தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை அதிகபதி தமிழகத்துக்கு தண்ணீர் பஞ்சமே இல்லாமல் எங்கள் தளபதி மாற்றி காட்டுவார்

  • Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்

    இது போல் தமிழ் நாடு எல்லைக்ளுறிந்து கர்நாடக விற்கு தண்ணீர் எங்கிருந்து என்பதை பார்த்து அணை கட்ட வேண்டும்

  • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

    கர்நாடகாவும், காவேரியும், தமிழ்நாடும் இந்தியாவில்தான் உள்ளது என்று இவர் புரிந்துகொண்டால் நல்லது. முதல்வர் பதவி ஏற்ற உடனேயே ஏதோ சொல்லி பிரபலமாக நினைக்கிறார் இவர்.

  • s.deepraj@gmail.com - chennai,இந்தியா

    Sun tv, Udhaya tv double stands pathi comment pota s$gg$l varisayil varavum...

Advertisement