Load Image
Advertisement

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்: திட்ட அறிக்கை தயாரித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை

 ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்: திட்ட அறிக்கை தயாரித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை
ADVERTISEMENT
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், 40 கோடி ரூபாய் செலவில், ஜெர்மன் தொழில்நுட்பத்திலான மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மழைநீர் தேங்குவதாகவும், பார்த்தசாரதி கோவில் குளம், மழைநீர் சேகரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், அதை மழைநீர் தேங்கும் வகையில் சீரமைக்க வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், 40 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால் அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கையை, மாநகராட்சி தயாரித்து வருகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், மிக பழமையான மழைநீர் வடிகால்கள் உள்ளன. இவை, பயன்படுத்தும் நிலையில் இருந்தாலும் பழுதடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கவும், இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பு வழங்கவும், பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. அதே போல், பார்த்தசாரதி கோவில் குளத்தில் மழைநீர் சேமிக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழில்நுட்பம் எப்படி?



ஜெர்மன் தொழில்நுட்பத்தில், சாலை மட்டத்தில் 4 அடி ஆழம், 19 அடி நீளம், 3.4 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்படும். பள்ளத்திற்குள், 6 முதல் 10 எம்.எம்., கன அளவுள்ள பொடி ஜல்லி கற்கள், 1.5 செ.மீ., உயரத்திற்கு நிரப்பப்படும். அதன் மேல், 400 ஜி.எஸ்.எம்., அடர்த்தி கொண்ட, 'ஜியோ பில்டர்' எனும் 'பேப்ரிக் கிளாத்' விரிக்கப்படும். பின், ஜெர்மன் தயாரிப்பான, 'பாலிபுரோபோலின்' எனும் பிளாஸ்டிக்கால் ஆன, 3.9 அடி நீளம், 500 மி.மீ., உயரம், 80 மி.மீ., அகலமுள்ள டனல் வைக்கப்படும்.

இப்பணி முடிக்கப்பட்டவுடன், 20 அடி நீளத்திற்கு மட்டும் ஐந்து டனல் வைக்கப்படும். அதன் மேல், மீண்டும் ஜியோ பில்டர் பேப்ரிங் கிளாத் போர்த்தப்பட்டு, டனல் மூடப்படும். பக்கவாட்டில் உள்ள பள்ளங்களில், 20 எம்.எம்., ஜல்லி, டனல் உயரத்திற்கு கொட்டி, இடைவெளிகள் மூடப்படும். அதன் மேல், சாலை மட்டத்திற்கு கிராவல் கல் பதிக்கப்பட்டு, அதன் இடைவெளியில் மணல் கொட்டி, புற்கள் வளர்க்கப்படும்.

இதனால், வடிகாலுக்கு செல்லும் மழைநீர், சகதிகள் வடிகட்டப்பட்டு, சுத்தமான நீராக குளங்களுக்குச் செல்லும். ஏற்கனவே, வடபழநி, மயிலாப்பூர் பகுதியில், இத்திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, மிக குறுகிய இடம் தான் தேவைப்படும் என்பதால், ஒரே இரவில் பணிகளை முடிக்க முடியும்.



வாசகர் கருத்து (5)

  • என்னுயிர்தமிழகமே - Ameerpet, hyderabad,இந்தியா

    ஆக்ரமிப்பு செய்யும் கழக உடன்பிறப்புகள் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க

  • duruvasar - indraprastham,இந்தியா

    எந்த நாட்டு தொழில்நுட்ப மானாலும் சரி , செயல்படுத்துவது தமிழக ஊராட்சி ஒன்றிய தொழில்நுட்பமாகத்தான் இருக்கவேண்டும்.

  • G.Kirubakaran - Doha,கத்தார்

    சோழ மன்னர்கள் காலத்தில் , ஆறுகளில் இருந்து -வெல்ல நீர் ஈறுகளுக்கும் பின்னர் குளங்களுக்கு வடிந்தது. இன்று கூட காவேரி ஆற்றிலிருந்து திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் சந்நிதிக்கு ஆதி மாசத்தில் நீர் வருகிறது. மதுரை தெப்பக்குளத்திகு வைகை நீர் வருகுறிது . நீர் பாயும் தாரைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தால் போதும்

  • ராஜா -

    சென்னை புறநகர் பகுதிகளில் சாக்கடை எந்த நாட்டு தொழில்நுட்பத்தில் தெருக்களில் ஓடுகிறது?

  • அப்புசாமி -

    ஆத்ம நிர்பரா மாதிரி நமக்கு நாமேன்னு ஏதாவது தயாரிக்க வேண்டியதுதானே... எதுக்கு ஜெர்மன் தொழில்நுட்பம்? ஒரு சாக்கடை அமைக்கக் கூட நமக்கு தெரியாதது வேதனை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement