dinamalar telegram
Advertisement

இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு

Share
புதுடில்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை தற்காலிக இடத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை துவங்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், ‛மதுரை எய்ம்ஸ் நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை துவங்கும். இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை துவங்க மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம். அதன்படி தமிழக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும்,' என பதில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

  • அப்புசாமி -

    அடிக்கல் நாட்டுன இடத்தில் 10 மரங்களை நட்டிருந்தாக் கூட இப்ப மாணவர்களைச் சேர்த்து மரத்தடி வகுப்புகள் எடுக்கலாம். இனிமே எப்போ இடத்தை தேடி, கட்டிடம் கட்டி வெளங்கிருவீங்க...

  • Marshal Thampi - Nagercoil,இந்தியா

    அரசு இந்நாள்வரை தூக்கிகிட்டு இருந்ததா ? அடிக்கல்நாட்டின 2019 முதல் என்ன தூக்கம் ? நிதி ஒத்துக்கலை ? கட்சிக்கு ஆள் பிடிக்கவே நிதியும் நேரவும் போதலை ? எல்லாம் வாய்ச்சவடால் தான் ? குமாரிஇல் 4 -ன்கு வழி சாலை pon Radakrishannan MP ஆகும் வரை இனி நிதியும் ஒதுக்கமாட்டாது வேலையும் துடங்கமாட்டாது ஒன்றியம் அரசு ...அதுபோல தான் மதுரை மதிய மருத்துவ கல்லூரியும் .....

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    ... அரசு மீதும் தவறில்லை , எடுபுடி பழனி மீதும் தவறு இல்லை என்ன செய்வார்கள் இருந்த ஒற்றை செங்கலை உதயநிதி எடுத்துக்கொண்டு பொய் விட்டார் , ஆகவே அவர்களுக்கு எந்த இடம் என்று தெரியவில்லை பாவம்

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    மறுபடியும் முதலில் இருந்தா அப்போ உங்களை உதயநிதி அசிங்கமா கேட்டது தப்பே இல்லை

  • அப்புசாமி -

    அடப்பாவிங்களா... அப்போ 2019 ல ஹெலிகாப்டர்ல வந்து அடிக்கல் நாட்டி வாழ் கிழிய பேசிட்டு போனது தற்காலிக இடத்திலா?அதுக்கு மேலே நிரந்தர இடம்னு ஒரு திட்டம் வெச்சிருந்தீங்களா? அடிக்கல் நாட்டுன நாலு செங்கல்லில் ஒண்ணை உருவிக்காமிச்சே ஒருத்தர் எம்.எல்.ஏ ஆயிட்டாரேடா...

Advertisement