dinamalar telegram
Advertisement

லிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57 அகதிகள் உயிரிழப்பு

Share
கெய்ரோ: லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்ததில் அகதிகள் 57 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபா மிஷெலி தெரிவித்து உள்ளதாவது:

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்தியதரைக் கடலில் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. லிபியாவிலிருந்து அண்மைக்காலமாக இவ்வாறு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் இவ்வாறு சென்ற 7,000க்கும் அதிகமானோர் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சியிலிருந்து படகு ஒன்று கடந்த 25ம் தேதி புறப்பட்டு உள்ளது. அதில் அகதிகள் 75 பேர் இருந்துள்ளனர். நடுக்கடலில் அந்தப் படகு நேற்று கவிழ்ந்ததில் ஏறக்குறைய 57 பேர் உயிரிழந்தனர். படகில் இருந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 18 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • BALOU - st-denis,பிரான்ஸ்

    ஈசியாக ஐரோப்பாவில் நுழைவதற்கு வழிமுறையும் சொல்லியுள்ளேன்

  • BALOU - st-denis,பிரான்ஸ்

    இவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைக்கிறன் ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் நுழைய வேண்டும் என்றால் கடல் மட்டுமே ஒரு வழி அல்ல மரோக்கா நாட்டின் மேற்கு பகுதியில் ஒரு சிறு பகுதி இன்றும் ஸ்பெயின் நாட்டின் காலனியாக உள்ளது .மெக்சிகொவிர்க்கும் .அமெரிக்கவிற்கும் இடையில் எப்படி இரும்பு வேலி உள்ளதோ அதை போல் இங்கும் உள்ளது அதை தாண்டி அந்த பகுதியில் குதித்தால் ஐரோப்பாவில் நுழைந்ததற்கு சமம் ஆகிவிடும் நிறைய பேர் இந்த வழியை பயன் படுத்துகிறார்கள் .

  • Gopalakrishnan - Karumathampatti,இந்தியா

    கடாபி இருந்த வரைக்கும் லிபியா நல்லா இருந்துச்சு.

Advertisement