dinamalar telegram
Advertisement

உஜ்ஜைனி கோயிலில் கூட்ட நெரிசல்: பலர் காயம்

Share
போபால்: மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்து உள்ளனர்.

நேற்று அந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர். ஒருவரும் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூடியிருந்தனர். அப்போது அந்த கோயிலுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி உள்ளிட்டோர் வந்தனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாராலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. கோயிலுக்குள் செல்லவும், விஐபிக்களை பார்க்கவும் முண்டியடித்தனர். இதில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரும் காயமடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • murphys law -

    koota nerisalil 100 corona uyirlapu

  • krish - chennai,இந்தியா

    மத்தியபிரதேச பிஜேபி அரசு வருமுன் காப்போம் என்று, ஆலய தரிசனத்தை நேரடி ஒளிபரப்பு மூலம், மற்றும் சமுதாய இடைவெளி கடைபிடித்து நெரிசலை தவிர்க்க தவறிவிட்டது. அத்தி வரதர் தரிசனத்தை அதிமுக அரசு கையாண்டவிதம் நினைவில் கொள்ள தக்கது,

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இருக்ற கூட்டத்தில இந்த ரெண்டு வேற...

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    பட்டும் திருந்தவில்லை என்ன செய்ய ?

  • S. Bharani - singapore,சிங்கப்பூர்

    திருந்தாத ஜென்மங்கள்.... யாரை குறை சொல்லி என்ன பயன்?

Advertisement