dinamalar telegram
Advertisement

இந்தியாவில் 29 ஆயிரமாக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Share
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரமாக குறைந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 29,689 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 42,363 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 21 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.98 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 415 பேர் பலியானதை அடுத்து, இதுவரை 4,21,382 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.39 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.27 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி



இந்தியாவில் இன்று (ஜூலை 27) காலை 8 மணி நிலவரப்படி 44.19 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 67,16,394 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக பாதிப்பு



இன்று (ஜூலை 27-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 19 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 லட்சத்து 83 ஆயிரத்து 291 பேர் பலியாகினர். 17 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 145 பேர் மீண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement