dinamalar telegram
Advertisement

"இப்போது எம்ஜிஆருக்கே அறிவுரை கூறினேன் என்கின்றனர் சிலர்... "

Share
ஜெ., தோழி சசிகலாவும், அவரது உறவினர்களும், ஜெ.,வுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. அவரின் இளகிய மனதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளை செய்து தங்களை வளமாக்கிக் கொண்டனர்.
-அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன்

'இது தான் உலகம் அறிந்த உண்மையாயிற்றே... ஆனால் இப்போது, எம்.ஜி.ஆருக்கே அறிவுரை கூறினேன் என்கின்றனர் சிலர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

சிரிப்பு என் அடையாளம். மனதில் இருப்பதை பேசுகிறேன். என்ன பேச வேண்டுமோ அதை சரியாகவும் பேசி விடுகிறேன். எம்.எல்.ஏ.,வாக இல்லாத நேரத்திலும் என் பேச்சை மக்கள் கேட்கின்றனர் என்றால், நான் சரியாக தானே பேசுகிறேன் என்று அர்த்தம்.-அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

'ஆட்சியில் இருந்த போதும், அ.தி.மு.க., ஆட்சியின் அடையாளமாக இருந்தீர்கள்; இப்போதும் அப்படியே தான் இருக்கிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணு உலை, 'நீட்' ஆகிய பிரச்னைகளில் போராடிய அனைவர் மீதும் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதுபோல, 'டாஸ்மாக், கெயில்' எதிர்ப்பு போராட்டங்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.-மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

'ஜிந்தாபாத் என கொடி பிடிக்க வேண்டியது; அதன் பின், வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்துவது... இதே வேலையாக போய் விட்டது உங்களுக்கு...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை

டில்லி செல்லும் தமிழக அமைச்சர்கள், சிறப்பான முறையில் தடுப்பூசி வினியோகம் நடக்கிறது என அங்கு பேட்டியளிக்கின்றனர். ஆனால், தமிழகம் திரும்பியதும், அரசியல் காரணங்களுக்காக அப்படியே, 'உல்டா'வாக மாற்றி பேசுகின்றனர்.-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

'இங்கே தமிழகத்தில் இருப்பவர்களை, மத்திய அரசுக்கு எதிராக துாண்ட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். அதனால், இங்கு பேச்சு, வேறு மாதிரி தான் இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு

நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சியை துவக்கி இரண்டு தேர்தல்களை சந்தித்து விட்டார். தேர்தல் களத்தில் அவர் தோற்றிருக்கலாம். எனினும், பா.ஜ., அளவுக்கு தோல்வி அடையவில்லை. களத்திலேயே இறங்காமல் இருப்பது தான் மிகப்பெரிய அவமானம்.-அரசியல் விமர்சகர், நடிகை கஸ்துாரி


'நடிகர் ரஜினியை இவ்வளவு துாரம் வாரியது நீங்களாகத் தான் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அரசியல் விமர்சகர், நடிகை கஸ்துாரி பேட்டிShare
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • oce -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENTS

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  என்ன ponnaiah நீங்கள் இப்போ இப்படி பேசி அப்போ அந்த அம்மா காலில் விழுந்ததை மறந்துவிட்டியா நீங்கள் தான் அம்மாவின் இடத்தை ஏற்கணும் என்று தீர்மானமா போட அன்று சுயநினைவு இல்லாமல் போடு விட்டேர்களா என்ன

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஆமா அந்த கலைஞர் டிவிக்கு ஒரு லட்சம் எப்ப தருவ ? // என்ன பேச வேண்டுமோ அதை சரியாகவும் பேசி விடுகிறேன்.//

 • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

  கூடவே இருந்து தப்பு செய்தவர்களையே கண்டுபிடிக்க முடியாதவரா ஸ்டீல் மங்கை?? கண்டு பிடித்திருந்தால் கூட்டு அல்லவா? இப்புடி ஆகி போச்சே பொன்னையன் சார்

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  எது எப்படியோ ,சசிகலா அதிமுக-வினுடைய பொதுச் செயலாளர் ஆகப்போவது உறுதி.டெல்லியில் பச்சைக்கொடி காட்டியாச்சு.

Advertisement