dinamalar telegram
Advertisement

தமிழக மின்துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Share
மதுரை : தமிழக மின்துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்காவிடில், மின்துறையின் நிதிநிலை மோசமான நிலைக்கு சென்றுவிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு நிறுவனம் தொழில் துவங்க 99 ஆண்டுகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், 'மின் தேவைக்காக உயரழுத்த மின் கம்பியை எங்கள் நிலம் வழியாக கொண்டு சென்றால் பாதிப்பு ஏற்படும். மாற்று வழித்தடத்தில் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தது.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு: பொதுநலன் கருதி அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சகம் முன்வர வேண்டும். தொழில்துறை மற்றும் மின்சாரத்துறை ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டால்தான் தீர்வு சாத்தியமாகும். பல்வேறு துறைகளுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாவிடில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மின்வாரிய நடவடிக்கை இருந்துவிடக்கூடாது. மத்திய மின்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

41 மின் உற்பத்தி நிறுவனங்களில், தமிழக மின்வாரியம் 39 வது இடத்தில் உள்ளது. அதாவது 0-20 புள்ளிகளுடன் 'சி' கிரேடில் உள்ளது. தமிழக மின்துறை அமைச்சகம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை அறிக்கை உணர்த்துகிறது.மின் கொள்முதல் செலவு மற்றும் மானியத்திற்காக அரசை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். சில பயனுள்ள நடவடிக்கை களை எடுக்காவிடில், மின்துறையின் நிதிநிலை மோசமான நிலைக்கு சென்றுவிடும்.திட்டம் செயல்படுத்துவது தொடர்பான இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மனுதாரர் தொழில்துறையை அணுகலாம். சம்பந்தப்பட்ட துறையின் ஒருங்கிணைப்புடன் தீர்வு காணலாம். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

 • raja - Cotonou,பெனின்

  என்ன எஜமான் இப்படி சொல்லிப்புட்டீங்க... இப்போ தான் மின்சாரம் எப்படி அணிலால் தடைபடுத்த படுகிறது என்று துறை அமைச்சர் விஞ்ஞான ஆராய்ச்சிப் பண்ணி கொண்டு இருக்கார்... அவரை போயி தூங்குறாருன்னு மனசாட்சியே இல்லாம சொல்லுறீங்களே.....

 • Gandhi - Chennai,இந்தியா

  வளர்ந்த நாடுகளைப்போல குடியிருப்பு பகுதி குறைந்த அழுத்த மின் கேபிள் முழுவதையும் பூமிக்கடியில் கொண்டு சென்றால் கோடி கணக்கில் மின் இழப்பையும், உயிர் பலிகளையும், போக்குவரத்து சிரமத்தையும் தவிக்கலாம். உயர் அழுத்த மின் டவர் நிலங்களின் வழியாக தான் செல்லவேண்டும். ரியல் எஸ்டேட் மார்க்கெட் விலையில் - தகுந்த இழப்பீடு வழங்கினால் நில உரிமையாளர் land Lord ஏன் நீதிமன்றத்திற்கு வரப்போகிறார். சரியான இழப்பீடு அரசு வழங்கவில்லை என்றால் விவசாயி / விவசாய பாதிப்பு என்று போலியான வாதங்களை நீதிமன்றம் சந்தித்துக்கொண்டே இருக்கும் .

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இன்றய நிலையில் TN elcy 31 ஆம் இடத்தில உள்ளது இன்றய நிலையில் 158000 கோடி LOSS இல் உள்ளது , எல்லாம் பவர் PURCHASES , இந்த ஆட்சியில் ஒரு மின் உற்பத்தி திட்டம் தொடங்க படவில்லை , கலைஞர் காலத்தில் கொண்டு வந்த திட்டத்தோடு சரி , இந்த 10 வருடம் நாசமாகி இப்போ 31 இடத்திற்கு கொண்டுவந்து விட்டார்கள்

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  விவசாயத்துக்கு இலவசம் என்று அளவற்ற மின்சாரத்தை கணக்கில் வராமல் செய்து ஊழல் செய்வதை நிறுத்த ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று அளவு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

 • Pandipanda - Pannadai,பால்க்லேண்ட் இஸ்.

  சரிதான். அடிமை அரசு 4 வருடம் தூங்கிக்கொண்டு இருந்தது உண்மை. ஜால்ரா அடிக்கும் கும்பலுக்கு சவுக்கடி. சபாஷ். BLOCK MY EMAIL.

Advertisement