dinamalar telegram
Advertisement

விரைவுபடுத்தப்படுமா: மேம்பாடு திட்டம் விரைவு படுத்தப்படுமா

Share
Tamil News
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு மேம்பாடு திட்டத்தில் ரூ.10 கோடியில் இருபுறமும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதற்காக அப்பன்திருப்பதி உள்ளிட்ட சில இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கள்ளந்திரியில் ரோடு நடுவில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அக்டோபரில் இப்பணிகள் துவங்கின. பணிகள் மந்த கதியில் நடப்பதால் வாகனஓட்டிகள் தினமும் விபத்திற்குள்ளாகின்றனர். பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தார் ஊற்றப்படாமல் கற்கள் பெயர்ந்துள்ளன. ரோட்டோர மரங்கள், மின்கம்பங்களை அகற்றாமல் ஜல்லிகற்களை பரப்பியுள்ளனர். இதனால் இரவு வாகனங்களில் செல்வோர் அவற்றில் மோதி விபத்திற்குள்ளாகின்றனர். சில வாரங்களுக்கு முன் இப்பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர். சனி, ஞாயிறு, புதன் கிழமைகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை, ஜூலை 27 -தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் மதுரை- அழகர்கோவில் ரோடு விரிவாக்கப்பணிகளை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்படாத மரங்கள், மின்கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement