dinamalar telegram
Advertisement

சுழன்றடிக்கும் ஆடி காற்றால் வாழைவிவசாயம் பாதிப்பு: இலை விலை உயர்வு

Share
Tamil News
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கோழியார்கோட்டை, கீழக்கோட்டை, நோக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், அதிகஅளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வாழை மரங்கள் தற்போது சுழன்றடிக்கும்ஆடிக்காற்றிற்கு தாக்கு பிடிக்க முடியாமல், வாழை இலைகள் காற்றில் கிழிந்து சேதமடைந்து வருகின்றன. இலைகள் சேதமடைந்து வருவதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், வாழை இலை (1கட்டு-200இலை) ரூ 350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், ஆடி காற்றால் வாழை சேதம் அடைந்து வருவதால், தற்போது வாழை இலை கட்டு ரூ.700 முதல் ரூ.900 வரை விற்கப்பட்டு வருகின்றன. வாழை இலை விலை உயர்வால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement