dinamalar telegram
Advertisement

நிறமில்லா அமிழ்தமே... நிலத்தின் உன்னதமே! நீரின்றி அமையாது! பி.ஏ.பி.,வாய்க்காலில் பாயப்போகுது...ஆடிப்பெருக்கு தினத்தில் திறக்க திட்டம்

Share
Tamil News
திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு ஆக., 3ம் தேதி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.பி.ஏ.பி., திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மண்டலத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

பருவமழை காரணமாக காண்டூர் கால்வாயில் மண், பாறை கற்கள் சரிவுகளை அகற்றும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். சோலையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பரம்பிக்குளத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.பரம்பிக்குளம் அணைக்கு சோலையாறு மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வினாடிக்கு, 6,276 கனஅடி நீர் வரத்து உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, மொத்தமுள்ள, 72 அடி உயரத்தில், நேற்று, 53.50 அடி நீர்மட்டம் இருந்தது.இதனால், நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என விவசாயிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்தது.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், நீர்வளத்துறை பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமியை சந்தித்து மனு கொடுத்து, தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.அதில், 'நான்காம் மற்றும் முதல் மண்டல பாசனத்துக்கு, ஐந்து சுற்று தண்ணீர் (மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி) வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆடிப்பெருக்கு நாளான ஆக., 3ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்து, அரசாணை பெற தீர்மானிக்கப்பட்டது,'
- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement