dinamalar telegram
Advertisement

எச்சரிக்கை! பூங்கா பராமரிப்பு இல்லாவிட்டால்....ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் என மாநகராட்சி

Share
Tamil News
சென்னை: 'சென்னை மாநகராட்சி பூங்காக்களில், பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சி பூங்காத்துறையின் சார்பில், 704 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 540 பூங்காக்களின் பராமரிப்பு பணிகள், ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தண்ணீர் பாய்ச்சுவது, களையெடுப்பது, புல்வெளிகளை பராமரிப்பது, ஊழியர்களை நியமித்து பாதுகாப்பை உறுதி செய்வது ஒப்பந்த நிறுவனங்களின் கடமை. ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வேண்டும்.
பூங்கா பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்; அலட்சியம் காட்டினால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். குடியிருப்போர் நலச்சங்கங்கள், தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து, புகார்கள் குறித்து மண்டல அலுவலகங்கள், வட்டார துணை ஆணையர் அலுவலகம், மாநகராட்சி தலைமையிடத்தில் தெரிவிக்கலாம். மேலும் 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    என்ன? ஒரு கோடி ரூவாய்க்கு ஒப்பந்தம் போட்டுட்டு சரியா பராமரிக்கலேன்னா ஒரு 100 ரூவா அபராதம் போடுவீங்க. பிச்சைக் காசு. முன்னாடியே கட்டிருவோமில்ல

Advertisement