dinamalar telegram
Advertisement

என்னை தோற்கடிக்க திமுக.,வில் உள்ளடி வேலை: அமைச்சர் துரைமுருகன்

Share
வேலுார்: என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க., நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்தது எனக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

காட்பாடி ஒன்றிய தி.மு.க., மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னையில் இன்று (ஜூலை 26) நடந்தது. இதில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் வரும் பொன்னை, காட்பாடி யூனியன் உள்ளிட்ட பல பூத்துக்களில் தி.மு.க.,வுக்கு குறைவாகவே ஓட்டுக்கள் கிடைத்தது. என்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க., நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்ததது எனக்கு தெரியும்.
அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. ஆனால் கடவுள் அருளால், கடைசி நேரத்தில் தபால் ஓட்டுக்களில் தான் நான் வெற்றி பெற்றேன். மறப்போம், மன்னிப்போம் என அண்ணா சொன்னதை போல வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறா விட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (50)

  • suresh kumar - Salmiyah,குவைத்

    // ஆனால் கடவுள் அருளால்,..// அட, அப்படி ஒன்று இருப்பதாக திமுக பகுத்தறிவு ஒப்புக் கொள்ளாதே?

  • raja - lalgudi,trichy,இந்தியா

    கடவுள் அருள்???????

  • Lakshmipathi S - Bangalore,இந்தியா

    பி.கே.சாமர்த்தியம் நமக்கு இல்லை என்பது தெரிந்து விட்டது. எனவே நம்மை விட பீஹாரிஸ் புத்தி கூர்மை உடையவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது. அனால் அது மாய வித்தை. போகப்போக புரியும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திமுகவில் ஜனநாயகம் சிறிது கூட இல்லை என்றாலும் இருப்பதாக காட்டுவதற்காகவே து. முருகனை விட்டு வைத்திருக்கிறார்கள். அதுவும் கூட பிடிக்கவில்லை என்று புகார் சொன்னால் து. முருகனை ஓரங்கட்டிவிட்டு மதுரையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து, களமிறக்கி கட்சியை பலப்படுத்தி விடுவார்கள்.

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    கடவுள் தபால் ஓட்டுகளினால் உங்களை வெற்றி பெற செய்திருக்கிறார்.. அவர் வெளியடி வேலை செய்திருக்கிறார்... உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என்றீர்களே.. உங்கள் தன்னம்பிக்கையை என்னவென்று சொல்ல...வயதாகிவிட்டது என்று உங்கள் மீது நீங்களே சுய பரிதாபம் கொள்ளாது, ஒதுங்கிக் கொள்ளாது ...போட்டின்னு வந்துவிட்டா சிங்கம் என்று எதிராளிகளுக்கு மெசேஜ் கொடுக்கிறீர்களே ...இப்பேர்பட்ட நம்பிக்கையிலிருந்து ஒரு கால் பாகம் எனக்கு கொடுங்களேன்..

Advertisement