dinamalar telegram
Advertisement

கலிபோர்னியாவில் வரலாறு காணாத காட்டுத் தீ: வீடுகள் தீக்கிரை- பல லட்சம் ஏக்கர் நாசம்

Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 14ம் தேதி, மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ பரவியது. அந்த காட்டுத் தீயின் தீவிரத் தன்மை கலிபோர்னியா மாகாணத்தையே புரட்டி போட்டது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி மீண்டும் அப்பகுதியில் 85 இடங்களில் பரவ தொடங்கிய காட்டுத் தீ, இந்தியன் பால்ஸ் முழுவதும் பரவி 12க்கும் மேற்பட்ட வீடுகளையும் புளூமாஸ் மற்றும் பட் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும் தீக்கிரையாகி உள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளதாவது: தொலைத்தூர பகுதிகளில் தீ பரவி வருகிறது. அதை அணைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. கிழக்கு நோக்கி தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், அல்மனோர் ஏரி கரைகளில் மீட்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் 85 காட்டுத் தீ 1.4 மில்லியன் ஏக்கர் நலங்களை தீக்கிரையாக்கி உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அஙகுள்ள அமெரிக்க மக்கள் தனிமை விரும்பிகள். ஆகையால் ஊரை விட்டு தள்ளி காட்டு பகுதிக்குள் நிலம் வாங்கி பெரிய அளவில் வீடு கட்டிக்கொண்டு தந்னகு கிறார்கள். சாதாரண மாக ஊருக்குள் தீ பகிரவுதில்லை. காட்டு தீயினால் புகை மண்டலம் காற்றை மாசு படுத்திவிடும்.அதன் விளைவு வீடுகள் ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்து கொண்டு வீட்டில் இருக்க வேண்டும். கட்டப்படும் வீடுகள் எல்லாம் மரத்தினால் ஆனது. எளிதாக தீ பெற்ற கூடியது.

Advertisement