dinamalar telegram
Advertisement

பிரதமர் உடனான சந்திப்பில் நடந்தது என்ன?: பழனிசாமி விளக்கம்

Share
புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது மேகதாது அணை, தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினோம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டு, பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பியும் அனுமதி தரப்படவில்லை. தற்போது, அவர்கள் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று (ஜூலை 25) காலை பன்னீர்செல்வமும், நேற்றிரவு பழனிசாமியும் டில்லி புறப்பட்டு சென்றனர். இவர்களுடன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரும் டில்லி சென்றனர்.
இன்று (ஜூலை 26) காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்த இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். சந்திப்பிற்கு பிறகு, முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம்.
நீர்ப்பற்றாக்குறையை போக்க காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி அதிமுக. திமுக அரசு தமிழகத்தில் லாட்டரி சீட்டை கொண்டுவராவிட்டால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (27)

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    திரும்பவும் கால்ல விழணுமா 🤔

  • Tamil - chennai,இந்தியா

    They looted tamilnadu , afraid of Sasikala & Stalin these cowards gone for Asylum to center & center may lose vote if they helps this corrupted leaders and lose more parliament seats, eps & ops is zero now according to TN PPl.

  • RajanRajan - kerala,இந்தியா

    கூட்டா டபாஸ் வேலை காட்டுறானுங்க.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    இங்கிருந்து நம் எதிர்க்கட்சி MLA க்கள் சென்று மேகதாது திட்டம் பற்றி பேச நேரம் ஒதுக்காத பிரதமர் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார் பாருங்கள்

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    டிஜிட்டல் இந்தியாவில் எதனை தோலை பேசியிலோ, ஈமெயிலிலோ செய்திருக்கலாம். கட்சி செலவில் இருவர். இந்த சந்திப்பிற்கு அரசாங்க தரப்பில் எவ்வளவு செலவு? பயன் என்ன? விளம்பரம். எல்லாம் விளம்பரம். என்னை மறந்து விடாதீர்கள் என்று மக்களுக்கு நியாபகம் ஊட்டுவதற்காக பிரதமர் சாதாரண மக்களை இது போன்று சந்திக்க நேரம் ஒதுக்குவாரா?

Advertisement