dinamalar telegram
Advertisement

அரசு இ-சேவை மையங்களில் நல்லா அலைய விடுறாங்க! சான்றிதழ் பெற மக்கள் அவதி!

Share
Tamil News
கோவை: அரசு இ-சேவை மையங்கள் ஆமை வேகத்தில் செயல்படுவதால், பொதுமக்கள் சான்றிதழ் பெற, விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கோவையில், 10க்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.

ஜாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சான்றுகள் பெற, பொது மக்கள் அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லுாரிகள் விரைவில் திறக்க இருப்பதால், மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் பெற, ஏராளமானவர்கள் அரசு இ-சேவை மையங்களுக்கு வருகின்றனர்.

ஒவ்வொரு மையத்திலும் காலை, 9:00 மணிக்குள் வரும், 20 பேர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் யாருக்கும் வழங்குவதில்லை. இதை அறியாத பலர், தினமும் விண்ணப்பிக்க வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.அரசு கேபிள் டி.வி., தாசில்தார் ஜோதிபாசு கூறுகையில், ''ஒரு விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய குறைந்தது, 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும். ஒரு நாளைக்கு, 20 விண்ணப்பங்கள் தான், பதிவேற்றம் செய்ய முடியும். இன்டர்நெட் சர்வர் வேகமும் குறைவாக உள்ளது. இதனால்தான் அதிகமாக விண்ணப்பிக்க முடியவில்லை.

எல்லா விண்ணப்பங்களுக்கும், வெளியில் உள்ள இன்டர்நெட் மையங்களிலும் பதிவேற்றம் செய்யலாம். வீட்டில் இன்டெர்நெட் இணைப்புடன், கம்ப்யூட்டர் வசதி இருப்பவர்கள், அவர்களே விண்ணப்பிக்கலாம். ''பொதுமக்கள் அரசு இ-சேவை மையத்தை மட்டும் நம்பி இருக்க வேண்டாம்,'' என்றார்.'ரெண்டு நாளா அலையுறேன்'ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சாரதா கூறுகையில், ''நான் ரெண்டு நாளா அலையுறேன்.

இன்னிக்குத்தான் டோக்கன் கிடைச்சது. 10 மணிக்கு மேல வந்தால் டோக்கன் கொடுக்கிறதில்லை. இன்ஜினியரிங் கல்லுாரி கவுன்சிலிங்குக்கு ஆன்லைனில் அப்ளை பண்ண, வர்ற 31ம் தேதி கடைசி நாள். சர்ட்டிபிகேட் கிடைக்க இன்னும், 15 நாள் ஆகுமுன்னு சொல்றாங்க. என்ன செய்யிறதுன்னு தெரியல,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • ராஜா -

    எப்போ பார்த்தாலும் ஒரே பதில் சர்வர் டௌன் தான். சென்னையிலும் இதே வெட்கக்கேடு தான்.மக்களுக்கு பயன் இல்லாத தண்ட செலவு.

  • Sathyanarayanan Sathyasekaren -

    PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

  • rajan -

    அரசு இ சேவை மையங்கள் வேஸ்ட். நங்கநல்லூரில் பல இடங்களில் இசேவை மையங்கள் உள்ளன. ஆதார் கார்டு, வோட்டர் ஐ.டி., இன்ஸ்யூரன்ஸ் கார்டுகள் வழங்கும் வசதிகள் கிடையாது. இங்கே இந்த வசதி. இல்லை ஆலந்தூர் தாசில்தார் அலுவலகம் போங்கள் என்கிறார்கள். ஆரம்ப காலங்களில் இசேவை மையங்களில் இந்த வசதிகள் இருந்தன. இப்போது இல்லை. நீண்டதூரம் போக முடியாதவர்களுக்காகவும், தாசிலதார் அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவும், மக்களை அலைக்கழிக்க கூடாது என்ற நல்ல நோக்கத்தில் திறக்கப்பட்ட இசேவை மையங்கள் இப்போது வெறும் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு மட்டுமே உள்ளன. போகப்போக இ சேவை மையங்கள் மூடப்படும் என்று தோன்றுகிறது.

  • அப்புசாமி -

    கொஞ்சநாள் பொறுங்க... வீட்டுக்கே வந்து சேவை குடுக்கப் போறாங்க.

Advertisement