dinamalar telegram
Advertisement

நீயே தடை... நீயே விடை! முன்னேறி வை காலை; தலைமுறை எழுதும் உம் பேரை!

Share
Tamil News
பல கோடி பேரில் ஒருத்தியம்மா நீ...வீட்டில் இருந்து, இரண்டு கி.மீ., துாரம்; காட்டில் இருந்து, விறகுக்கட்டைகளை சுமந்து வருவார், சாய்கோம் மீராபாய் சானு. 'என்னை விட நான்கு வயது சிறியவள் மீரா; ஆனால், என்னை விட அதிக எடையில், விறகை சுமந்துவருவாள்' என்கிறார், அவரது சகோதரர் சனதோம்பா.அன்று விறகுக்கட்டைகள் மூலம் பளு சுமந்தவர், இன்று ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு, பளு துாக்கும் போட்டியில், வெள்ளிப்பதக்கத்தை அள்ளிக்கொடுத்திருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த மீராவின் பெயர், இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் தெரிகிறது. சாதிக்க, வறுமை ஒரு தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டி, முன்னெப்போதும் இல்லாத அளவு, திருப்பூர் இளைஞர்களை ஈர்த்து வருகிறது. திருப்பூர் தொழில்துறையில் சாதித்துக்காட்டியதற்கும், சாதிப்பதற்கும், இளைஞர்கள்தான் முதுகெலும்பு. திருப்பூர் இளைஞர்கள் முயன்றால், ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் பெற முடியும்.

தருண் அய்யாசாமியின்புயல்வேக கால்கள்இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்பவர், தருண் அய்யாசாமி; அவிநாசியை சேர்ந்தவர். 2018ல், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, திருப்பூருக்கு பெருமை சேர்த்தார்.இந்த முறை, ஒலிம்பிக்கில் பங்கு பெறுவதற்கான முதல் சுற்று போட்டி, பஞ்சாபில் நடந்தபோது, தருணுக்கு தொற்று உறுதியானதால், பாதியிலேயே விலக நேரிட்டது. அடுத்து வரும் வேறு போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும், தருணின் மந்திரக்கால்கள், புயல் வேகம் காட்டினால், மாயாஜாலத்தை எதிர்பார்க்கலாம். தடை தாண்டும் போட்டியில், இவரது சாதனை, பல தடைகளைத் தாண்டித்தான் கிடைத்திருக்கிறது.

நம்பிக்கையூட்டும்நட்சத்திரங்கள்

திருப்பூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். கோவை கல்லுாரியில், எம்.ஐ.பி., படிக்கிறார். ராஞ்சியில் நடந்த தேசிய தடகள போட்டியில், 100 மீ., பிரிவில் வெள்ளி, தொடர் ஓட்டத்தில் தங்கத்தை கைப்பற்றியவர்; புவனேஸ்வரில் நடந்த தேசிய தடகள போட்டியில், 100 மீ., பிரிவில் வெள்ளி வென்ற இவர், அடுத்த நகர்வுக்காக காத்திருக்கிறார்.மாவட்ட அளவில் மாநில போட்டிக்கு, 18 பேர் தேர்வாகி அவ்வப்போது பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசின் 'கேலோ இந்தியா' போட்டியில் வெள்ளி வென்ற கார்த்திகேயன், வைஷாலி, தேசிய போட்டியில் வெள்ளி வென்ற சன்மந்த்தர்ஷன், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய போட்டியில் வெண்கலம் வென்ற பவீனா, அஞ்சலிசில்வியா, பல்கலை அளவிலான போட்டியில் தங்கம் வென்ற ராகுல் ஆகியோர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

தேசிய போட்டிகள்நடத்த தயார்நிலை

பனியன் தொழில் மூலம் திருப்பூரை உலகறிய செய்த தொழில்துறையினர் மாவட்டத்தில் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவிகளை வழங்குகின்றனர். மாநில கபடி, தேசிய வாலிபால் போட்டிகளை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.இந்திய அணிக்கான 'ஏ' கிரேடு கிரிக்கெட் போட்டி, கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டாக, ஊரடங்கு தொடர்வதால், எந்த விளையாட்டு போட்டியும் நடத்த அனுமதியில்லை. தொற்றின் பிடியில் சிக்கிய தொழில் மெல்ல மீண்டு வரும் இச்சூழலில், நேரத்தை ஒதுக்கி, நிதியை செலவிட்டு போட்டிகளை நடத்தவும் தொழில்துறையினர் தயாராக உள்ளனர்.தொற்று நீங்கி, ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டால், நிச்சயம் மின்னொளியிலும், ரசிகர் கரவொலியிலும் போட்டி நடப்பது என்பது உறுதி.

செயற்கை ஓடுதளம்அமைக்கப்படுமா?

திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் 18 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அனுப்பர்பாளையம் பள்ளியில் தடகள மைதானம் அமைக்க, விரிவான வசதி இருப்பதால், அங்கு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.மாவட்ட போட்டிகளை நடத்த கூட தனியார் பள்ளி, கல்லுாரிகளையே, திருப்பூர் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் கூடைப்பந்து ஸ்டேடியம், கடந்த ஐந்தாண்டாக அமைக்கப்படாமல் உள்ளது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளை நடத்தவும் வசதி இல்லை.தாலுகா, ஊராட்சி அளவில் மைதானங்கள் புதர் மண்டி, பயன்பாடற்ற நிலையில் உள்ளது. மாவட்டத்தில் விரிவான மைதான வசதி ஏற்படுத்தினால் மட்டுமே, அடிப்படை விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் உயரும்.

திறமையாளர்களைகண்டறிய வேண்டும்

ஒலிம்பிக் குறித்து அனைத்து தரப்பு வீரர், வீராங்கனைகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் http://fitindia.gov.in என்ற இணையதள 'லிங்க்' வழங்கியுள்ளது. இதில், கடந்த 22ம் தேதி முதல் 'ரோடு டு டோக்கியோ' எனும் தலைப்பில் வினாடிவினா போட்டி நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். ஒலிம்பிக் போட்டி குறித்து கேள்வி கேட்கப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு இந்திய அணி 'டி சர்ட்', பங்கேற்பு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுகிறது.
திருப்பூரில் உள்ள எஸ்.டி.ஏ.டி., மைதானம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பொது இடங்களில் 'ஒலிம்பிக் போட்டோ பாயின்ட்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலர் ஆர்வமுடன் அதன் முன் நின்று போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.பள்ளி அளவில் விளையாட்டில் சிறந்து விளக்கும் மாணவரை தேர்வு செய்து, மண்டல, மாநில போட்டிக்கு, தேசிய, சர்வதேச அளவில், பங்கேற்க செய்ய விளையாட்டு விடுதி வசதி வேண்டும். திறமையான மாணவரை கண்டறிந்து, தொடர் பயிற்சி அளித்தால், ஓலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு கைகூடும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • rupya -

    கொங்கு யூனியன் கிடைத்தால் தமிழக தென் மேலண்டை பகுதி மேலும் உயரும். தென் கிழக்கிலுள்ள பகுதி மக்கள் இடுப்பில் கட்டியதுண்டுடன் சென்னைக்கு ஓடி வந்து சென்னையில் குறுக்கு வழிகளில் பெரிய செல்வந்தர்களாவது போல் கொங்கு பகுதியினர் அவ்வளவாக சென்னையை நாடாமல் அவர்கள் வசிக்கும் பகுதிகளையே தொழில் நகரங்களாக்கி அங்கேயே உழைத்து முன்னேறுகிறார்கள். அவர்களால் அவர்களது பகுதிகளும வளர்ச்சியடைகிறது. சென்னை பக்கம் ஓடி வருவதில்லை.

Advertisement