dinamalar telegram
Advertisement

வாட்ஸ் ஆப் குழு மூலம் போலீசார் நிதி உதவி

Share
சென்னை: தங்களுடன் பணியில் சேர்ந்த மற்றும் பயிற்சி பெற்ற போலீசார் இறந்தால் அவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி அளிக்க, 'உதவும் உறவுகள்' என 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கியுள்ள போலீசார், 72.31 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.
தமிழக காவல் துறையில் 1999ல், இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த போலீசார், 3,500 பேர் தற்போது, தலைமை காவலர்களாக பணியில் உள்ளனர். இவர்கள், தங்களுடன் பணியில் சேர்ந்த மற்றும் பயிற்சி பெற்ற போலீசார், விபத்து மற்றும் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இறந்தால், அவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி அளிக்க, 'உதவும் உறவுகள் - 99' என்ற 'வாட்ஸ் ஆப்' குழுவை உருவாக்கி உள்ளனர்.
இக்குழுவை, நான்கு ஆண்டுகளுக்கு முன், தலைமை காவலர் சபரிநாதன் என்பவர் துவங்கினார். தற்போது, இக்குழுவில் 2,900 போலீசார் இணைந்துள்ளனர். இவர்களிடம், தலா 500 ரூபாய் வசூலித்து, 3 மாதங்களில் இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு, 72.31 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement