dinamalar telegram
Advertisement

கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு

Share
சென்னை: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீர் வரத்து, திடீரென அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர மாநில அரசு திறக்க வேண்டும். இதன்படி, ஜூன் முதல் இதுவரை 1.28 டி.எம்.சி., நீரை ஆந்திரா விடுவித்துள்ளது. ஆந்திராவில், கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது, கண்டலேறு அணையில் 36.2 டி.எம்.சி., இருப்பு உள்ளது. அணையில் இருந்து, நெல்லுார் மாவட்ட விவசாயிகளுக்கு, வினாடிக்கு 1,925 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர், தமிழகத்திற்கு வருவதும் அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 759 கன அடி நீர், தமிழகத்தின் ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்ட்' எல்லைக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement