dinamalar telegram
Advertisement

‛பெண்களுக்கு மரியாதை நடத்துனர்களுக்கு அறிவுரை

Share
Tamil News
சென்னை: ‛பஸ் நடத்துனர்கள், பெண் பயணியரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பின் படி, மாநகரில் ஓடும் சாதாரண கட்டண பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இலவச பயணம் செய்யும் மகளிரை, பஸ் நடத்துடனர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதுடன், மரியாதை குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர், கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விபரம்:
* நடத்துனர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என, பெண் பயணியரை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.
* வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
* பெண் பயணியரிடம் எரிச்சலுாட்டும் வகையில், கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ, பேசக்கூடாது.
* பெண்கள் பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும், கண்காணித்து, ஓட்டுனருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பான பயணித்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    //ஓட்டுனருக்கு சமிக்ஞை செய்து// என்னய்யா பாசை இது? சிக்னல் என்று அளகான தமிலில் இயம்பவும்.

Advertisement