dinamalar telegram
Advertisement

விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

Share
லண்டன்: ‛‛தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது,'' என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. மேலும், அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசும், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் புகலிடம் கேட்டு விஜய் மல்லையா விண்ணப்பம் செய்துள்ளதால் அதன் மீது முடிவு எடுக்கப்பட்டு பிறகு நாடு கடத்துவது குறித்து உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அப்போது விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இங்கிலாந்து தரப்பின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

நாங்கள் சிறப்பாக வழக்குகளை நடத்தி வருகிறோம். மேலும் இங்கிலாந்திடம் இருந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக உத்தரவாதம் வந்துள்ளது. அதனால் அவர் இந்தியா கொண்டு வரப்படுவது உறுதி. இவ்வாறு ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • raja - Cotonou,பெனின்

  கவலை படாதீங்க... நீரவ் மோடி வக்கீல் சொன்னது போல இந்தியாவுக்கு நாடு கடத்தினா தற்கொலை பண்ணிப்பாருன்னு உங்க வக்கீலையும் சொல்ல சொல்லுங்க...

 • ravi chandran -

  உயிடுடனா அல்லது இறந்த பிறகா. சூப்பர்

 • அப்புசாமி -

  நீரவ் மோடி அசகாய சூரர். பிரதமர் மோடியுடன் டாவோஸ் மாநாட்டுக்கு சென்று அங்கேருந்தே லண்டனுக்கு கம்பி நீட்டிட்டாரு.

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியின்போது, அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ரூபாய் 9000 கோடி கடன் வாங்கி, பாஜக ஆட்சியில், கடனை திருப்பி செலுத்துமாறு கேட்கப்பட்டதால், திருப்பி கட்டுவதற்காக நாங்கள் காங்கிரசுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கவில்லையே பாஜக வந்து வாங்கிய கடனை கட்டச்சொல்கிறார்களே என பதறிப்போன விஜெய் மல்லையா, லண்டனுக்கு தப்பி ஓடினார் வெளிநாடு சென்றாலும் விரட்டிப்பிடிக்க தேவையான சரியான சட்டங்கள், நமது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை இதை கருத்தில் கொண்டுதான் பலரும் ஓடுகிறார்கள் எனவே, பாஜக அரசு அதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து, திமுக காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி சட்டம் உருவாக்கப்பட்டது பாஜக அரசால் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தின்படிதான், இந்திய அதிகாரிகள் லண்டன் சென்று அங்கு உள்ள நீதிமன்றத்தை அணுகி, விஜெய் மல்லையாவை, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள் அந்த முயற்சி வெற்றிப்பெறும் நிலையை எட்டியிருப்பது நல்ல செய்தியாகும் பாஜக அரசால் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி, இதுவரை விஜெய் மல்லையாவின் 7181 கோடி ரூபாய் மத்திப்புள்ள பங்கு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளிடம் தரப்பட்டுள்ளது 792 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்து வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இனி 1027 கோடி ரூபாய் வசூலிக்கபடவேண்டியுள்ளது ஏழைகளின் வரிப்பணத்தை வாரி பணக்காரர்களுக்கு கமிஷன் அடிப்படையில் கொடுப்பது திமுக காங்கிரஸ் அரசு, அந்த கொடுக்கப்பட்ட பணத்தை, உரிய சட்டத்திருத்தங்களை கொண்டுவந்து, வசூலித்துக்கொண்டிருக்கிறது பாஜக அரசு

 • Amal Anandan - chennai,இந்தியா

  பேச்சு மாறவே மாறாது இன்னும் பத்து வருடம் ஆனாலும்.

Advertisement