dinamalar telegram
Advertisement

காங்கேயம் இன மாடுகள் ரூ.16 லட்சத்துக்கு விற்பனை

Share
Tamil News
காங்கேயம்;காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே, காங்கேயம் இன மாடுகள், 16 லட்சம் ரூபாய்க்கு விற்றது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறு தோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என 90 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள் 20ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று 12 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்றது. மொத்தம் 40 கால்நடைகள் 16 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை பொருப்பாளர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகட்டும். அதன் பயனை மக்கள் உணரட்டும். என் பங்குக்கு நான் ஒரு மாடு வளர்க்கிறேன்

Advertisement