dinamalar telegram
Advertisement

கரூர் அரசு மருத்துவமனை செவிலியர் கோவிட் தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற விவகாரம்: கரூர் நகராட்சி ஆணையருக்கு சம்மன் ?

Share
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் செவிலியர் ஒருவர் கோவிட் தடுப்பூசியை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியான நிலையில் அங்கு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரில் வசித்துவரும் தனலட்சுமி என்பவர் கரூர் தாய் சேய் நல மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கரூர் மருத்துவமனையிலிருந்து செவிலியர் தனலட்சுமி மருத்துவமனைக்கு தெரியாமல் கோவிஷீல்டு தடுப்பூசிகளை (100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் படுவதற்கு போதுமான அளவு) தெரியாமல் வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், எடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு அந்த தடுப்பூசிகளை போட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரிக்கு புகாராக சென்றதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட செவிலியரின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் செவிலியரின் வீட்டில் இருந்த கரோனா தடுப்பூசிகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து செவிலியரிடம் கேட்டபோது, உறவினர்களுக்கு செலுத்துவதற்காக தடுப்பூசிகளை எடுத்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால் 100 பேருக்கு செலுத்தும் அளவிற்கான கோவிட் தடுப்பூசிகளை எடுத்து வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து செவிலியர் தனலட்சுமியிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இப்படி சேவலியர் ஒருவர் கோவிட் தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்றது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து கரூர் நகராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் பணிபுரியும் அந்த நர்ஸ் செயலால் நகராட்சி ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தெரிய வருகின்றது.

செவிலியர் சஸ்பெண்ட்



இதனையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் செவிலியர் தனலட்சுமியை சஸ்பெண்ட் செய்தும் மேலும் அவர் மீது துறை ரீதியானவிசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

  • hariharan subramanian -

    PLEASE DON'T REPEAT THE SAME COMMENTS

  • அப்புசாமி -

    ஆணையருக்கு எதுக்கு சம்னன்? அவரை அந்த செவிலியரை பணியில் நியமித்தார்? இல்லே, தடுப்பூசியை எடுத்துக்கொண்டு போகச் சொன்னாரு? முதல்க அந்த திருடியை டிஸ்மிஸ் செய்யுங்க.

  • அப்புசாமி -

    இந்த ரேஞ்சுல போனா மா.சு மாசம் 10 கோடி ஊசியாவது கேக்கணும்

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஆஹா செந்தில் பாலாஜின்னா சும்மா வா ?தொகுதியே புகழ் பெருகிறதே ?வீட்டில் சென்று தடுப்பூசி வழங்குவோம்னு மாசு சொன்னது இது தானா ?எப்படியோ இந்த மாதிரி ஒழுங்கீனங்களில் எல்லாமே இந்த ஆட்சிக்கு வந்தவுடன் தானே நடக்குது .?அதிகாரிகளும் மாற வில்லை ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் மாறிவிட்டது எதை குறிக்கிறது ?-தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி 'என்ற பழமொழியே நினைவுக்கே வருது .

  • NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா

    ஜார்ஜு கைது மாதிரி இந்த விசாரணையும் பெயருக்கு விசாரணை என்பதாகி விட கூடாது?

Advertisement