dinamalar telegram
Advertisement

செவிலியர் வீட்டில் கோவிஷீல்டு தடுப்பூசி பறிமுதல்

Share
திண்டுக்கல்: கோவிட்ஷீல்டு தடுப்பூசியை செவிலியர் மருத்துவமனையிலிருந்து தெரியாமல் எடுத்து வந்து வீட்டில் வைத்து அதிக விலைக்கு பொதுமக்களுக்குப் போட்டு வந்ததாக கிடைத்த புகாரை தொடர்ந்து வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி நடத்திய சோதனையில் சோதனையில் 8vial மருந்து பாட்டில் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரைச் சேர்ந்த 50 வயதான தனலட்சுமி இவர் கரூர் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் வைத்து தடுப்பூசி போடுவதாக வந்த தகவலை அடுத்து இன்று வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரிக்கு சுகாதாரத் துறையினர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அய்யனார் நகரில் செவிலியர் தனலட்சுமியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது தனலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கோவிட்ஷீல்ட் மருந்து 8vial பாட்டில்களை வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி தலைமையிலான சுகாதாரத் துறையினர் கைப்பற்றினர். இந்த மருந்தினை 100பேருக்கு செலுத்தலாம்.

இது குறித்து வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். தடுப்பு மருந்து கிடைக்காமல் மக்களும் அரசும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில்அரசு மருத்துவமனையில் இருந்து தெரியாமல் மருந்து பாட்டில்களை எடுத்து வந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்தது வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரியிடம் கேட்டபோது இந்த செவிலியர் கரூர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். எப்படி தடுப்பூசி யை தெரியாமல் எடுத்து வந்தார் என்பது குறித்தும் இவ்வளவு மருந்துகள் அதிக விலைக்கு போடுவதற்காக தான் எடுத்து வந்து இருக்கவேண்டும். இது குறித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது விரைவில் இவர்கள் மீது கரூர் சுகாதார த்துறை உதவி இயக்குனர் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement