dinamalar telegram
Advertisement

குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் வாழ்த்து

Share
குன்னுார் : குன்னுாரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் மோடி மன்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தது நீலகிரிக்கே பெருமை அளிக்கிறது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டிச்சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி என்பவர் முயற்சியால், நீலகிரியில் முதல் முறையாக 'ஆம்புரிக்ஷ்' என அழைக்கும், 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் ரூ.21 லட்சம் செலவில் நீலகிரியில் கடந்த 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இவை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து, 470 சிசி திறன் கொண்ட, பஜாஜ் மாக்சிமா, ஆம்புலன்சாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்சில் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதி, ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், உள்ளிட்ட முக்கிய வசதிகள் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, வானொலியில் மன் - கி- பாத் நிகழ்ச்சியில், ராதிகா சாஸ்திரியின் சமூக சேவை குறித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராதிகா கூறுகையில், " நீலகிரி கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளில் ஆம்புலன்ஸ் சென்று வருவது பயன் அளிக்கிறது. இந்நிலையில், இந்த சேவை குறித்து முதல் முறையாக நீலகிரியை பற்றி மன் - கி- பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதும் பெருமை அளிப்பதாக உள்ளது, " என்றார்.

இவரின் முயற்சியால் ஏற்கனவே குன்னூர் அரசு மருத்துவமனையில், ஏ.சி.டி., (ஆக் ஷன் கோவிட் 19 டீம்) என்ற அதிரடி கோவிட் குழுவின், ரூ.70 லட்சம் மதிப்பிலான தானியங்கி ஆக்சிஜன் கொள்கலன் பிளான்ட் அமைத்ததும், தற்போது அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

  • S.kausalya - Chennai,இந்தியா

    தமிழர்களாகிய நாங்கள் இந்த சாஸ்திரி ஆம்புலன்சில் ஏற மாட்டோம். அது ஆரிய Penmaniyudayadhu என்று எல்லாம் சொல்ல மாட்டார்கள். இவர்களின் தலைவர்களே தாங்கள் பதவிக்கு வர வேண்டுமென்றால் கோடிகோடி யாக ஒரு aariyanidam பணம் கொட்டி கொடுத்தவர்கள் தானே. இலவசம் என யார் கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். என்ன சிறிது சுணக்கம் இந்த பெண்மணி காட்டினாலும் உடனே ஜாதி அப்படி என கேவலபடித்துவார்கள் தமிழனின் desine அப்படி.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இந்த மாதிரி நாட்டில்நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட கண்டுபிடித்து பாராட்டுவதில் மோடிக்கு நிகர் மோடிதான். இந்த பாராட்டின மூலம் அந்த சகோதரிக்கு எவ்வளவு மன நிறைவு கிடைத்திருக்கும் என்பது அனுபவித்தால்தான் தெரியும். அந்த சகோதரிக்கும் மோடிக்கும் எனது பாராட்டுதல்கள்.

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    இந்த ஆம்புலன்ஸ் வண்டிகளை மாசு அவர்கள் ஆயிரம் குறைகள் சொல்லுவார் . அது சரி இல்லை . இது சரி இல்லை , அவரது இன்னொரு குற்ற சாட்டை பாருங்கள் அதிமுக அரசு வாங்கிய . முக கவசங்கள் தரம் அற்றவை என்று வசவு புராணத்தை ஆரம்பித்துவிட்டார்

  • RAJ - ,

    அவ்வளவு தான் மோடி வாழ்த்தியாச்சா இனி திராவிடன் சொல்லிக்கிட்டு திரியர ஆளுங்க குறை சொல்ல ஆரம்பபிச்சிடுவாங்க

  • ருத்ரா -

    வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பாராட்டுக்கள் சினேகிதி

Advertisement