dinamalar telegram
Advertisement

ஒரே நாளில் 262 பயங்கரவாதிகள் குளோஷ் !

Share
காபூல்: ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 262 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அறிவித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாதிகள் கடுமையாக தாக்கி, பல நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கன் ராணுவம் - தலிபான் பயங்கரவாதிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
லக்மன், நங்கர்ஹர், நூரிஸ்தான், குனார், கஜ்னி, பக்டியா, காந்தகார், ஹெரட், பலக், ஜோவ்ஜன் ஹெல்மண்ட், குண்டூஸ் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நவடிக்கையில் 262 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 176 பேர் படுகாயமடைந்தனர். 21 ஐஇடி வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, தலிபான்களை ஊடுருவலை தடுக்கும் வகையில் காபூலை தவிர்த்து மற்ற மாகாணங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

 • Charles - Burnaby,கனடா

  பாகிஸ்தானை பக்கத்தில் வைத்திருக்கும் நாடுகளுக்கு என்றுமே அமைதி இருக்கமுடியாது. ஏனென்றால் பாகிஸ்தாநின் அட்டூழியத்தை ஆதரிப்பது சீநாவாகும்,

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஒரு உலகத்தின் முன்னேற்றத்திரத்திநை அளவீடு செய்ய வேண்டுமென்றால் அது அதனை எதிர்ப்பவர்கள் திறனை பொறுத்தே இருக்கும் எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்போர் இருக்கிறார்களோ அதை பொறுத்தே ஒன்று முன்னேற முடியும் அதாவது அழிவு ப்பாதையை தேர்ந்தெடுப்பார் கைகளில் அது சிக்கிக்கொள்கிறது என்பார்கள்.இதுவே இன்று நடந்து கொண்டிருக்கிறது .கோடிக்கணக்கில் உள்ள மக்களை கட்டுப்படுத்துவது எளிது ஆனால் ஒரு சில தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்க்கென்றே உலகமும் ஆள்பவர்களும் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள் ,இந்தியாவில் இன்று இதே நிலையில் நாம் இருக்கிறோம் ,இந்த தீவிரவாதத்தில் மதம் (எல்லோரையும் ந வெளிப்படுத்த வேண்டியது ) ஒரு ஆயுதமாக .கருவியாக அமைந்து விடக்கூடாது.மத போதகர்களும் குருமார்களும் இதை உணராது இருத்தல் பெரும் அபாயம் மானுட உலகிற்கு.அவர்கள் குறுகிய நோக்கத்தில் கட்சிகளையும் வியாபாரங்களை நடத்துவது போல வாழ்வை நடத்துவது அழிவையே தரும்.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  கடைசி ஒரு தலிபான் தீவிரவாதி உயிருடன் இருக்கும்வரையில், அமைதி என்பது இல்லை. ஆகையால், ஒருவனையும் விடாமல் கொன்றுவிடவேண்டும். அடுத்து அவர்களுக்கு உதவிபுரியும் பாகிஸ்தான் நாட்டினரையும் கடுமையாக எச்சரிக்கவேண்டும்.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  தாலிபானை பின்னிருந்து பாகிஸ்தானிய ராணுவம் இயக்குகிறது. தலிபான் போல வேஷம் போட்டுக்கொண்டு பல பாகிஸ்தானிய பஞ்சாபிகளும், ராணுவத்தினரும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அதனால் தாலிபான் கடைசியில் முக்கால்வாசி ஆப்கானிஸ்தானை தன வசம் கொண்டு வரத்தான் போகிறது. அதன் பிறகு எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதுதான் அறியாத விஷயம். எல்லாவற்றையும் குண்டு வைத்துத் தகர்ப்பது சுலபம். கட்டுவது கடினம். நிர்வாகம் செய்வது கடினம். துப்பாக்கி முனையில் மக்களை ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிறையில் இருப்பது போல வைத்திருக்கலாம். ஆனால் குண்டுகள் சோறு போடாது. பொருளாதாரம் குன்றினால் கலவரம் மீண்டும் தொடரும். பாகிஸ்தான் இதில் பணத்தையும் நேரத்தையும் செலவழித்தால் அவரகளது பொருளாதாரமே சரிந்து அதனால் அவர்கள் உள்நாட்டு போர்கள் ஏற்பட்டு துண்டு துண்டாகலாம். இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற வெறி பிடித்து அதிலேயே அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

  அமைதி மார்க்கமும் மூர்க்கமும் , தானும் நிம்மதியாக வாழாது , பிறரையும் வாழ விடாது ..அல்லா & இறைத்தூதரின் பாலைவன பிரசாதம் இந்த உலகுக்கு ..

Advertisement