dinamalar telegram
Advertisement

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முகக்கவசம் தரமற்றது: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Share
சென்னை: அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முகக்கவசங்கள் பாதுகாப்பானதாக இல்லாமல், தரமற்றதாக இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கோவிட் வைரஸ் பரவல் கடந்தாண்டு மார்ச்சில் துவங்கியது. கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது, ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 2 முகக்கவசங்கள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது. துவைத்து பயன்படுத்தும் வகையில் துணியால் ஆன முகக்கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. இந்த முகக்கவசங்கள் தரமற்றதாக உள்ளதாக புகார் எழுந்தது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நாடா துணியில் தயாரித்த மாஸ்கை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (54)

  • RajanRajan - kerala,இந்தியா

    அவனுங்க கொடுத்தது முக கவசமா என்ன??? தரித்திரியங்கள். ஒரு இடத்திலும் கூட வலிச்சு புடிச்சு கட்ட முடியாத ஒரு சாதனத்தை அதுவும் ரேஷன் கடையிலே வச்சு கொடுத்தான் பாரு 21 ஐ நாராயண நாராயண

  • ravi chandran -

    அடுத்த தெர்மோ கோல் வாழ்க

  • அப்புசாமி -

    பாக்கறதுக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மாதிரி இருக்காரு. பேச்சும் கிட்டத்தட்ட அப்பிடியே இருக்கு.

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    ஒன்று செய் மா.சு பேசாமல் உன் பதவியை ராஜினாமா செய்து விடு. என் என்றால் உன் செய்கைகள் அத்தனையும் மாசுபட்டதாகவே உள்ளது ஒன்றும் உருப்படியாக இல்லை. உன்னை ஒரே பேண்ட் அதுவும் கருப்புக்களாற் வெள்ளை சட்டை இதிலிருந்தே தெரிகிறது உன் லட்சணம். அபவர்கள் கொடுத்த மாஸ்க் தரமற்றது என்று நீ சொல்ல கூடாது மக்கள் சொல்ல வேண்டும்.. தரமற்ற வாக்குறுதிகள் தரமற்ற பேச்சுக்கள் தரமற்ற அரசு இவற்றை நிறுத்தி விட்டு ஒழுங்கான ஆட்சியை செய்யுங்கள்.

  • அப்புசாமி -

    நீங்க என்ன மாதிரி மாஸ்க் குடுக்கறீங்க? குடுக்கப் போறீங்க? நல்ல ராமராஜ் காட்டன் மாஸ்க் 400 ரூவாதான். குடுங்க. இல்லேன்னா N95 மாஸ்க் குடுங்க. புது விடியல் வரட்டும்.

Advertisement