dinamalar telegram
Advertisement

பெரியாறு அணை -நீர்மட்டம் உயர்வு

Share
Tamil News
தேக்கடி:நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 7139 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 134.50 அடியை எட்டியது.தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த 2 வாரத்திற்கும் மேலாக நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 30.60 மி.மீ., பெரியாறில் 38.20 மி.மீ., மழை பெய்தது. 4294 கன அடியாக இருந்த நீர்வரத்து இதனால் 7139 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 131.50 அடியில் இருந்து ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நேற்று மதியம் 2:00 மணி நிலவரப்படி 134.50 அடியை(மொத்த உயரம் 152 அடி) எட்டியது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5586 மில்லியன் கன அடியாகும். நீர்பிடிப்பில் நேற்று பகலில் மழை தொடர்ந்ததால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 81 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement