dinamalar telegram
Advertisement

தமிழ் இணைய ஒருங்குறி பயன்பாடு குறித்து பயிற்சி

Share
சென்னை, ஜூலை 25-தமிழ் இணைய ஒருங்குறியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துவது குறித்த செயல் முறை விளக்க பயிற்சியை, தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் மனோதங்கராஜ், துவக்கி வைத்தார்.தமிழ் இணைய, 'யுனிக்கோடு' எனப்படும், ஒருங்குறியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது மற்றும் ஒருங்குறி மாற்றியை பயன்படுத்துவது குறித்த செயல் முறை விளக்க பயிற்சி, இணைய வழியில் நேற்று நடந்தது. இதை, அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். தமிழ் இணைய கல்விக் கழக இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பயிற்சி விளக்கத்தின் போது, தமிழ் ஒருங்குறி எழுத்துருவான, 'மருதம்' எவ்வாறு பதிவிறக்கம்செய்வது; அதை தட்டச்சு செய்ய, எந்த விசைப்பலகை உகந்தது; வானவில், அவ்வையார், ஸ்ரீலிபி, பாமினி, டாம், டாப் முதலான குறியீட்டுமுறையில், தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களை, ஒருங்குறி மாற்றி மென்பொருளை பயன்படுத்தி, எவ்வாறு மாற்றுவது என, விளக்கப்பட்டது. தமிழ் இணைய கல்விக் கழகத்தில் உருவாக்கப்பட்ட, பிழை திருத்தியை, எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விளக்கப்பட்டது. பயிற்சியில், 1,500 பேர் கலந்து கொண்டனர். சந்தேகம் இருந்தால், 97100 39249, 044 - 2220 9400 ஆகிய எண்களில் அல்லது, cdntacd.tva@tn.gov.in, tva@tn.gov.in என்ற இ - மெயில் வழியாகவோ, தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement