dinamalar telegram
Advertisement

வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Share
சென்னை:'டாஸ்மாக் கடை எதிர்ப்பு உட்பட, மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான, அனைத்து வழக்குகளையும், திரும்பப் பெற வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.கட்சியின் மாநில குழுக் கூட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. மூன்று நாட்கள் கூட்டம் நடக்க உள்ளது. இரண்டாம் நாளான நேற்று, கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயலர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.நேற்றைய கூட்டத்தில், டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு, விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு, எரிவாயு குழாய் பதிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement