dinamalar telegram
Advertisement

24 மணி நேரம்! 74 வீடுகளுக்கு குடிநீர் வினியோகம்: சோதனை முறையில் இதோ துவக்கம்: மீட்டரில் முள் வேகமாக ஓட்டம்

Share
Tamil News
கோவை:கோவை, தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில், சோதனை முறையில், 74 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.கோவை பழைய மாநகராட்சி பகுதியான, 60 வார்டுகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தில், குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், மீட்டர் பொருத்துதல், குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

சோதனை முறையில், தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில், பிருந்தாவன் கார்டன், கற்பகம் கார்டன், அம்மா நகர், முத்தையா உடையார் வீதி, தெலுங்குபாளையம் மெயின் வீதியில், 74 வீடுகளுக்கு, ஒரு மாதமாக, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.பகிர்மான குழாயில் இருந்து வீடு வரை குழாய் பதித்து, மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இரு நாட்களுக்கு ஒருமுறை, 'மீட்டர் ரீடிங்' எடுத்து, ஆய்வு செய்யப்படுகிறது.ஆனால், நம்பிக்கை இல்லாத மக்கள் சிலர், வழக்கம்போல் டிரம்களிலும், தொட்டிகளிலும் தண்ணீரை சேமித்து வைத்து, உபயோகிக்கின்றனர். மீட்டரில் உள்ள முள், மின் மீட்டரை விட வேகமாக ஓடுவதாகவும் அச்சப்படுகின்றனர்.
முத்தையா உடையார் வீதியை சேர்ந்த ஷோபா கூறுகையில், ''இதற்கு முன், ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்தது. இப்போது, 24 மணி நேரமும் தண்ணீர் வந்தாலும், தரைமட்டத்துக்கு கீழ் வால்வு இருப்பதால், ஒவ்வொரு முறையும் திறந்து, மூட வேண்டியுள்ளது.எந்நேரமும் திறந்து வைத்திருந்தால், மீட்டர் ஓடிக்கொண்டிருக்கும் என்கின்றனர். மின் மீட்டர் முள் வேகமாக ஓடுகிறது. குழாய் உடைந்து தண்ணீர் சப்ளை செய்யாவிட்டால், தவிக்க வேண்டி வருமே என்பதால், முன்கூட்டியே பிடித்து வைத்துக் கொள்கிறோம்,'' என்றார்.

இதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் கூறுகையில், ''தேவையான தண்ணீரை தொட்டியில் சேமித்து வைத்து பயன்படுத்துகிறோம். தேவைப்படும் நேரமெல்லாம் பிடிக்கலாம் என்றாலும், அதிகமான தண்ணீரை வீணாக்கி விடுவோம். நான்கு நாட்களுக்கு ஒருமுறை, தேவையான அளவு மட்டும் பிடித்து பயன் படுத்துகிறோம்,'' என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பரீட்சார்த்த முறையில், 74 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்கிறோம். இனி, தெலுங்குபாளையம் சுற்றியுள்ள, 2,086 வீடுகளுக்கும் வழங்க முடிவு செய்திருக்கிறோம். இரண்டாவது மாடி வரை, அதே அழுத்தத்தில் தண்ணீர் சப்ளையாகும். 24 மணி நேரமும் சப்ளையாகும் என்பதால், தொட்டியில் சேமித்து வைத்து, பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement