dinamalar telegram
Advertisement

முயற்சி! செயற்கை கருவூட்டல் சிகிச்சையை .....ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் சேர்க்க கவர்னர் தமிழிசை

Share
Tamil News
புதுச்சேரி : செயற்கை கருவூட்டல் சிகிச்சையை, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் சேர்க்க முயற்சி எடுப்பேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

'இந்தியாவில் குழந்தை யின்மை குறைபாட்டிற்கு தீர்வு காணுதல்' என்ற தலைப்பிலான இணையவழி தேசிய கருத்தரங்கு நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை பேசிய தாவது:இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தை இல்லாத தம்பதிகளை, சமுதாயம் பலவீனமாக பார்க்கிறது. பலவித மூட நம்பிக்கை ஆலோசனை வழங்குகின்றனர்.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அறிவியல் பூர்வமான தீர்வுகளை நிபுணர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், குறைந்த செலவி லான செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையை பிரபலப்படுத்தவது, அனைத்து பிரிவு பெண்களுக்கும் கருவூட்டல் சிகிச்சை கிடைக்க வழி வகுக்கும். கருவூட்டல் சிகிச்சை முறைக்கான செலவுகளை குறைக்க முயற்சிக்க வேண்டும். குழந்தையின்மை சிகிச்சையையும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க முயற்சி மேற்கொள்வேன்.இவ்வாறு கவர்னர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement