dinamalar telegram
Advertisement

மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அட்மிட்

Share
சென்னை-நெஞ்சு வலி காரணமாக, சிவசங்கர் பாபா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, கேளம்பாக்கம்அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர் மீது, மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். அதனால், 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில், இரு வழக்குகள் பதியப்பட்டன.சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிவசங்கர் பாபாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவிற்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவரது உடல்நிலை குறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'வயது மூப்பின் காரணமாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

    எதற்கு , எதையும் நீக்க போகிறார்களா , செத்த பாம்புக்கு நீக்கினால் என்ன இல்ல நீக்காவிட்டால் என்ன , எடுத்து விடலாம் , செத்த கிளிக்கு கூண்டு எதற்கு

  • ram -

    அதுதானே என்னடா இன்னும் நெஞ்சு வலி வரலியேன்னு பார்த்தேன்.

  • Chidam - 325,இந்தியா

    கதம் கதம்

  • rupya -

    பாவம்வயதான நபர்.நாடி நரம்பு தளர்ந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்ய வாய்ப்பில்லை. அந்த மூன்று பிள்ளைகளின் பின்னணியில் பாபாவுக்கு வேண்டாத திமுக காரன் எவனாவது இருந்திருப்பான். ஒரு சாமியாருக்கு இவ்வளவு பெரிய பள்ளிக்கூடம் எதற்கு. அவரை காலி பண்ணால் அதை ஆட்டைய போடலாமே என்று மனக் கணக்கு போட்டிருப்பான்கள்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    எப்படியோ ஒரு நல்ல மனுஷன் பெயரை கெடுத்தாச்சு...அருமை

Advertisement