dinamalar telegram
Advertisement

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ 37 கோடியில் தொங்கு பாலம்

Share
கன்னியாகுமரி; சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 140 மீட்டர் தூரத்திற்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்
இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுற்றுலா மாளிகை கட்டப்படும். நெல்லையில், ரிங் ரோடு அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்'. இவ்வாறு அமைச்சர் பேசினார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

 • rupya -

  தமிழ் நாட்டின் பரப்பளவை சுருக்கினாலொழிய திராவிடம் போகாது. அரசியல் ஆட்சி முறை முதல் போடாத வியாபார நிறுவனமாகி விட்டது.

 • Kumar - Madurai,இந்தியா

  திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த ஏதோ என்று கூறியவரின் வாரிசுகள் தான் திராவிடர்கள். முதலில் அவர்கள் கொள்கையின் படி ஏரியை ஆக்கிரமித்து வள்ளுவர்கோட்டம் கட்டியதே தவறு.பின் வள்ளுவருக்கு சிலை வைத்ததும் தவறு. இப்ப தொங்கு பாலமா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • ஆரூர் ரங் -

  அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க முதல் குரல் கொடுத்ததும் அதே விவேகானந்தர் நினைவுச் சின்னம்🙏 உருவாக்கிய ஆர் எஸ் எஸ் காரர்.

 • rupya -

  உலக கடலின் பொது நீர்மட்டம் இன்னும் சில நூறாண்டுகளில் தரைக்குள் வரப்போகிறது. அதை சென்னைக்குள் வராதபடி கான்கிரிட் தடுப்பணைகள் கட்டலாம். ஏற்னவே அரசு நஷ்டத்தில் ஓடுகிறது.அதை சரி செய்யாமல் இதெல்லாம் வேண்டுமென்று எந்த பொது ஜனம் கேட்டான். பத்தாண்டுகளாக இந்த மாதிரி உபயோகமற்ற திட்டங்களை நுழைக்க காத்திருந்தார்களா.

 • rupya -

  இது தேசிய தண்ட செலவு. அதாவது நேஷனல் லாஸ்.அந்த 37 கோடியை கிராமங்களில் குடிசை வாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகளுக்கும் சாலை மேம்பாட்டிற்கும் பயன் படுத்தலாமே. சொந்த பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டியது தானே. ஊரான் வூட்டு நெய்யே.என் பொண்டாட்டி கையே என்பது போல் உள்ளது.

Advertisement