dinamalar telegram
Advertisement

மீனவர்களுக்கு நவீன கருவிகள்

Share
சென்னை:''தமிழக மீனவர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பில் 5000 நவீன டிரான்ஸ்பாண்டர் கருவிகள் வழங்கப்பட உள்ளன'' என மீன் வளத்துறை செயலர் ஜவகர் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும் மீன்பிடிப் படகுகள் செல்வதை கண்காணிக்கவும் 'இஸ்ரோ' எனும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நவீன 'டிரான்ஸ்பாண்டர்' கருவி எனப்படும் 'ஒயர்லெஸ்' கருவிகளை வடிவமைத்துள்ளது.தமிழக அரசு 15 கோடி ரூபாய் மதிப்பில் ௫௦௦௦ கருவிகளை கொள்முதல் செய்கிறது. இவற்றை அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஜவஹர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement