dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.எஸ்., தலைவரை விமர்சித்ததாக உதவி கமிஷனர் ஜீப் முன் மறியல்

Share
மதுரை:மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன் தினம் இரவு போலீஸ் வரதட்சணை பிரிவு உதவி கமிஷனர் அக்பர்கான் ரோந்து சென்றார்.அங்கிருந்த ரோட்டோர ஓட்டலை அடைக்க உத்தரவிட்டார். இதுகுறித்து ஓட்டல் தொழிலாளி வி.ஐ.பி., வந்துள்ளார்களா என கேட்ட போது மதுரை வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறித்து உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

உதவி கமிஷனர் ஒருமையில் ஆர்.எஸ்.எஸ்., தலைவரை விமர்சித்ததாக கூறி அவரது ஜீப் முன் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த பா.ஜ., இளைஞரணி முன்னாள் நிர்வாகி பிரவீன்குமார் மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார். பின் உதவி கமிஷனர் வருத்தம் தெரிவித்ததையடுத்து மண்டல் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்தி பிரவீன்குமாரை அழைத்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • லிங்கம், சென்னை - ,

    சிங்கம் சிங்கிளாகத்தான் களமிறங்கும்....சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் களமிறங்கிய வீரனுக்கு தலை வணங்குகிறேன்....இந்த ஒன்று நூறாகி...நூறு ஆயிரமாகி...ஆயிரம் லட்சமாகி...லட்சம் கோடியாகும்...!!!

Advertisement