dinamalar telegram
Advertisement

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க குழு அமைத்து முடிவு: அமைச்சர் மஸ்தான் தகவல்

Share
மதுரை:''தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து குழு அமைத்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மதுரையில் சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

சாத்தமங்கலம் அரசு சிறுபான்மையினர் நல பள்ளி மாணவியர் விடுதியை ஆய்வு செய்த அமைச்சர் கூறியதாவது: விடுதி மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் உணவை அதிகரித்து வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பதை காட்டிக்கொள்ள அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.

அவர்களது ஆட்சியில் எல்லாவற்றுக்கும் மக்கள் போராடினர். மூன்று மாதங்களில் மட்டும் வெளிநாடுகளில் இறந்த 30 பேரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இலங்கை அகதிகள் முகாம்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்வதுடன், கொரோனா நிவாரண நிதியாக ரூ.5.42 கோடி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

புதுார் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி கொரோனா தடுப்பூசி முகாம், உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை அமைச்சர் ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், டி.ஆர்.ஒ., செந்தில்குமாரி உடன் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement