dinamalar telegram
Advertisement

பிரதமர் நிவாரண நிதி என்ற பெயரில் பணத்தை திருடும் வங்கி ேஹக்கர்ஸ்

Share
Tamil News
மதுரை:வங்கி மேலாளர் போல் பேசி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் கும்பல், 'பிரதமர் நிவாரண நிதிக்காக' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பி அதிர்ச்சியூட்டி வருகின்றனர்.

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனி ஜெயலட்சுமி. இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், 'நான் இந்தியன் வங்கி மேலாளர். உங்கள் ஏ.டி.எம்., கார்டு 'பிளாக்' ஆகி விட்டது. அதை சரிசெய்ய உங்கள் பின் நம்பர் வேண்டும்' என்றுக்கேட்டார். ஜெயலட்சுமியும் பதட்டத்தில் பின் நம்பர் கூறினார். வங்கி கணக்கில் ரூ.5500 இருந்தது.சில நிமிடங்களுக்கு பின் சுதாரித்த ஜெயலட்சுமி, அருகில் உள்ள ஏ.டி.எம்.,மிற்கு உடனே சென்று ரூ.5 ஆயிரத்தை எடுத்தார். மீதித்தொகையை எடுப்பதற்குள் அவரை தொடர்பு கொண்ட அந்நபர், ஆபாச வார்த்தைகளால் திட்டி 'அதற்குள் ஏன் எடுத்தாய். மீதித்தொகை ரூ.500ஐ நான் எடுக்கிறேன் பார்' என்றுக்கூறி அதை எடுத்துக்கொண்டார்.

அந்த ரூ.500 எடுத்ததற்கான எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில் பிரதமர் நிவாரண நிதிக்காக எடுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.போலீசார் கூறியதாவது: வங்கிஹேக்கர்ஸ் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. பிரதமர் நிவாரண நிதி என்று எஸ்.எம்.எஸ்., அனுப்புவது புது ஸ்டைலாக உள்ளது. இதுபோல் வேறு திட்டங்கள் பெயரில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகிறார்களா என விசாரித்து வருகிறோம், என்றனர்.

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்



அலைபேசியில் வங்கி கணக்கு விபரங்களை தரக்கூடாது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பி., அல்லது பின் நம்பர் கேட்டால் தரக்கூடாது. வங்கிக்கு சென்று விசாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் KYC அப்டேட் செய்ய வேண்டும் என்று லிங்க் அனுப்பினால் அதை 'கிளிக்' செய்ய வேண்டாம். எந்த வங்கியும் 'லிங்க்' அனுப்புவதில்லை. வங்கி சம்பந்தமான பணம் இழப்பிற்கு 155260 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement