dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

Share
வாஷிங்டன்-முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார்.
இந்தியா, அமெரிக்க இடையேயான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நல்ல நட்புணர்வு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் 27ம் தேதி இரவு டில்லி வருகிறார்.வரும் 28ம் தேதி காலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்புகளின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பாக அவர் பேச உள்ளார். மேலும் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, 'குவாட்' அமைப்பின் வாயிலாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அமெரிக்கா செல்ல வழிவகை செய்யவேண்டும். மூன்றுமாகமாக இருக்கும் தடையை நீக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

  • கௌடில்யன் - Chennai ,இந்தியா

    ப்ரோட்டாகால் அநுமதிக்கிறதா ... அவர் லெவலுக்கு வெளியுறவு அமைச்சரை சந்தித்து விட்டு செல்லலாமே ...

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

    நெருங்கிய நண்பர் UNSTOPPABLE சீன அதிபர் புல்லட் ரயிலில் பயணம் செய்தால் "சார் மிரட்டுறான் சார்" அமெரிக்க மந்திரி இந்தியா வருகிறார் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுகிறது

Advertisement