dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Share
மதுரை:''நீட் தேர்வில் தன் நிலைப்பாட்டை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்,'' என மதுரையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தற்போது செப்., 2வது வாரத்தில் நீட் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தன் நிலைப்பாட்டை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.மத்திய அரசு தேவையான கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

ஆனால் தமிழகத்தில் முறையாக அவற்றை பிரித்து அனுப்பவில்லை.இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் வந்தன, எவ்வளவு பேருக்கு போட்டுள்ளோம் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.தேவேந்திர குலவேளாளர்களை பட்டியலினத்திலிருந்து வெளியேற்றிய பிறகு தான் இடஒதுக்கீடு குறித்து பேச முடியும்.

குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம்,பெட்ரோல், டீசல் விலையை முறையே ரூ.5, 4க்கு குறைப்போம், நகை கடன் தள்ளுபடி செய்வோம் என தேர்தலில் அறிவித்ததை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். மாவட்ட நிர்வாகி தெய்வம் உடனிருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement