dinamalar telegram
Advertisement

மத்திய பல்கலை துணைவேந்தர் பதவியும் காமராஜ் பல்கலையை சுற்றும் குழப்பங்களும்

Share
மதுரை:திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தராக கிருஷ்ணன் தேர்வானதை அடுத்து அவர் இதுவரை துணைவேந்தர் பதவி வகித்த மதுரை காமராஜ் பல்கலையில் கடும் நிதி நெருக்கடி பேராசிரியர்கள் பதவி உயர்வு பெயரளவிலான 'பொறுப்பு' பதவிகள் பிரச்னை என திடீர் குழப்பங்கள் சூழ்ந்துள்ளன.

கிருஷ்ணனுக்கு இப்பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் வரும் 2022 ஜன.யில் முடிகிறது. ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்பே மற்றொரு பல்கலை துணைவேந்தராக பதவியேற்க உள்ளார்.இப்பல்கலைபுதிய துணைவேந்தரை தேர்வு செய்யகுறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும். இந்நிலையில் துணைவேந்தருக்கு அடுத்த நிலையில் பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் நிரப்பப்படாததால் புதிய துணைவேந்தர் பதவியேற்கும் வரை 'தலைமை' இல்லாத பல்கலையாக தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பதிவாளர் தேர்வாணையர் டீன் தொலைநிலை கல்வி இயக்குனர் கூடுதல் தேர்வாணையர் உள்ளிட்ட முக்கிய உயர் பதவிகளில் பதவி உயர்வு பிரச்னை உள்ள 'சிக்கல்' பேராசிரியர்களே பெரும்பாலும் கூடுதல் 'பொறுப்பு' வகிக்கின்றனர். கிருஷ்ணன் பதவியில் இருந்த இரண்டரை ஆண்டுகளில் இப்பதவிகளை அவர் நிரப்பவில்லை.இதுதவிர பேராசிரியர்கள் அலுவலர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய முடியாத அளவில்கடும் நிதி நெருக்கடி உள்ளது.

40 பேராசிரியர்கள் பதவி உயர்வு பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.ஓய்வு நீதிபதி அக்பர் அலி கமிட்டி பரிந்துரைப்படி அவர்கள் பதவி உயர்வு குறித்து மறு ஆய்வு செய்து அதுதொடர்பாக சிண்டிகேட்டில் இதுவரை ஒப்புதல் பெறாத நிலையில் ஆக.12ல் இதுதொடர்பான வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.

இதுபோல் கடந்த மார்ச் முதல் சிண்டிகேட் கூட்டங்களும் நடத்தவில்லை. இதனால் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளின் வளர்ச்சி மற்றும் பாடத் திட்டம் தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் நிலுவையில் உள்ளன. நிர்வாக ரீதியிலான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல்கலைக்கு யார் பொறுப்பு: அடுத்து என்ன நடக்கும்



பதவிக்காலம் முடிவதற்குள் மற்றொரு பல்கலை துணைவேந்தராக செல்லும் சூழ்நிலையில் இதை 'நிரந்தர காலியிடமாக' கருத வேண்டும். பல்கலை விதிப்படி துணைவேந்தர் பதவியை விட்டு செல்வதற்கு முன் சிண்டிகேட்டை கூட்டி குழு நியமித்து துணைவேந்தர் பொறுப்புக் களை ஒப்படைக்க வேண்டும்.மூத்த உதவி பேராசிரியரான ஜெயலட்சுமி சிண்டிகேட் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் தற்போது மூன்று சிண்டிகேட் உறுப்பினர்கள் தான் உள்ளனர்.

மேலும் பதிவாளர் மூலம் புதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெறும் சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகளை தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்பும் பொறுப்பும் உள்ளது. இதன் பின்துணைவேந்தர் பதவியில் இருந்து அவர் விடுவித்து செல்ல முடியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement